

சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த கிர்கிஸ்தான் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அதிலிருந்து பிரிந்தது.
‘மத்திய ஆசியாவின் சுவிட்சர்லாந்து’ என்று கிர்கிஸ்தான் அழைக்கப்படுகிறது.
இந்நாட்டின் பரப்பளவில் 80 சதவீதம் மலைகள் உள்ளன. சுமார் 2,000 ஏரிகளும் இந்நாட்டில் உள்ளன.
கிர்கிஸ்தானில் குறைந்த அளவு மக்களே வாழ்கிறார்கள். அங்கு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 33 பேர் என்ற விகிதத்திலேயே மக்கள் தொகை உள்ளது.
குதிரை இறைச்சி, இந்நாட்டு மக்களின் விருப்பமிகு உணவுகளில் ஒன்றாகும்.
கோடைக்காலத்தில் இந்நாட்டில் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும். அதுவே குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் இருக்கும்.
கிர்கிஸ்தானின் தேசிய பானமாக குதிரைப்பால் உள்ளது.
கிர்கிஸ்தான் மக்களுக்கு தேநீர் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும், தேநீரையும் பருகுவது அவர்களின் வழக்கம்.
கிர்கிஸ்தான் மக்களின் முக்கியத் தொழில் மேய்ச்சலாகும்.
கிர்கிஸ்தானில் 417 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.