பளிச் பத்து 61: வெள்ளி மங்கை பவினா படேல்

பளிச் பத்து 61: வெள்ளி மங்கை பவினா படேல்
Updated on
1 min read

பவினாபென் படேல் 1986-ல் குஜராத்தில் உள்ள மெஹ்ஸானா என்ற ஊரில் பிறந்தார்.

பவினாவின் அப்பா ஹஸ்முக் பாய் படேல், உள்ளூரில் சிறிய அளவில் கடை நடத்தி வந்தார்.

பவினா பிறந்து 12 மாதங்களுக்குப் பிறகு அவரது கால்கள் செயலிழந்துள்ளன. இதற்காக அறுவை சிகிச்சை செய்தபோதிலும், உடற்பயிற்சிகளை சரியாகச் செய்யாததால் கால்களை குணப்படுத்த முடியவில்லை

2011-ம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த தாய்லாந்து டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கம் நடத்திவந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் லாலா தோஷி என்ற டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரை பவினா சந்தித்தார்.

லாலா தோஷி கொடுத்த உற்சாகத்தால், பவினா டேபிள் டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

மாற்றுத் திறனாளியான பவினா தினமும் 2 பேருந்துகளில் ஏறி பயிற்சிக்குச் சென்றுவந்தார்.

பவினாவின் கணவரான நிகுல் படேல், தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இந்தியாவுக்காக 28 சர்வதேச போட்டிகளில் பவினா ஆடியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இதுவரை 5 தங்கம், 13 வெள்ளி மற்றும்8 வெண்கலப் பதக்கங்களை பவினா வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in