

தியான் சந்த்தின் பிறந்தநாள் இந்தியாவில் விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தியான் சந்த், 14 கோல்களை அடித்தார்.
1936-ம் ஆண்டில் தியான் சந்த்தை, ஜெர்மனியின் குடிமகன் ஆகுமாறு ஹிட்லர் அழைப்பு விடுத்தார். ஆனால் தியான் சந்த் இதை ஏற்க மறுத்தார்.
தியான் சந்த்தின் நினைவாக, மத்திய அரசு 1980-ம் ஆண்டில் தபால் தலை வெளியிட்டது.
1932-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மட்டும் அவர் 12 கோல்களை அடித்தார்.
சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 400 கோல்களுக்கு மேல் தியான் சந்த் அடித்துள்ளார்.
தியான் சந்த் அதிக கோல்களை அடிப்பதால், அவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருக்கிறதா என நெதர்லாந்து அணியினர் ஒருமுறை சோதனை நடத்தினர்.
ஹாக்கி விளையாட்டைத் தவிர மல்யுத்தத்திலும் தியான் சந்த்துக்கு அதிக ஆர்வம் இருந்தது.
தியான் சந்த், தனது 16-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
தியான் சந்த்தின் உண்மையான பெயர் தியான் சிங். இரவு நேரத்தில் அவர் தீவிரமாக ஹாக்கி பயிற்சி பெற்றதால், அவரைச் செல்லமாக ‘சந்த்’ (இந்தியில் ’நிலவு’) என நண்பர்கள் அழைத்தனர்.