

பூனைகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை தூங்குகின்றன. அவை தங்களின் வாழ்க்கையில் சுமார் 70 சதவீதத்தை தூங்கிக் கழிக்கின்றன.
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள டல்கீட்னா என்ற நகருக்கு, ஸ்டம்ப்ஸ் என்ற பூனை 20 ஆண்டுகள் மேயராக இருந்துள்ளது.
1963-ம் ஆண்டில், ஃபெலிகே என்ற பூனை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
புலிகளின் குணாதிசயத்தில் 95 சதவீதத்தை பூனைகள் கொண்டுள்ளன.
வீட்டில் வளர்க்கும் பூனைகளால், மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓட முடியும்.
பூனைகளால் தங்கள் காதுகளை 180 டிகிரி வரை சுழற்ற முடியும்.
பூனைகளுக்கு 230 எலும்புகள் உள்ளன.
பூனைகளால் தங்கள் உயரத்தைவிட 5 மடங்குஅதிக உயரம் வரை குதிக்க முடியும்.
குட்டிப் பூனைகளுக்கு 26 பற்களும், பெரிய பூனைகளுக்கு 30 பற்களும் இருக்கும்.
‘கிரீம் பஃப்’ என்ற பூனை மிக அதிகமான ஆண்டுகள் உயிர்வாழ்ந்த பூனையாக கருதப்படுகிறது. டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த இப்பூனை 38 ஆண்டுகள் உயிர்வாழ்ந்துள்ளது.