

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம் கொண்டது.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடட் நிறுவனத்தில் இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரூ. 23,000 கோடி செலவில் இக்கப்பல் தயாரிப்பட்டுள்ளது.
இக்கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்ல முடியும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் 40 ஆயிரம் டன் எடை கொண்டதாக உள்ளது.
இக்கப்பலில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை வைத்து கேரளாவின் கொச்சின் நகரத்தில் உள்ள பாதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியும்.
இக்கப்பலில் 2,600 கிலோமீட்டர் நீளத்துக்கான மின்சார கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் வகையில், மிகப் பிரம்மாண்டமான சமையலறை இந்த கப்பலில் உள்ளது.
இக்கப்பலின் மேல்தளத்தில் 20 போர் விமானங்களை நிறுத்திவைக்க முடியும்.
இக்கப்பலில் 25-க்கும் மேற்பட்ட பெண் கடற்படை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.