

உலகில் சுமார் 38 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன.
எல்லா வகையான சிலந்திகளுக்கும் 8 கால்கள் உள்ளன.
பறவைகள், வவ்வால்கள் ஆகியவற்றை விட அதிக அளவிலான பூச்சிகளை சிலந்திகள் உண்ணும்.
சிலந்திகளின் வலையில், ‘வைட்டமின் கே’ உள்ளது. காயத்தின் மீது இதை வைத்தால், ரத்தத்தை கட்டுப்படுத்தும்.
மிகப்பெரிய சிலந்தியான ‘கோலியத் பேர்ட் ஈட்டர்’ 11 அங்குலம் வரை வளரும்.
சிலந்திகளில் சிலவற்றுக்கு 6 கண்களும், சிலவற்றுக்கு 8 கண்களும் உள்ளன.
ஒரு சில வகை சிலந்திகள் மற்ற சிலந்திகளை உண்ணும்.
சிலந்திகளால் ஒரு மணி நேரத்துக்குள் தங்கள் வலையைப் பின்ன முடியும்.
சில வகை சிலந்திகள் தண்ணீருக்குள்ளும் வாழும்.
சிலந்திகளுக்கு பற்கள் கிடையாது. ஒரு வகையான திரவத்தை பூச்சிகளின் மீது செலுத்தி உருக்கி, பின்பு அவற்றை உண்ணுகின்றன.