

சிங்கங்கள் 14 வயதுவரை உயிர்வாழும்.
பெண் சிங்கங்கள் பசியாற நாளொன்றுக்கு 5 கிலோ இறைச்சியும், ஆண் சிங்கங்களுக்கு நாளொன்றுக்கு 7 கிலோ இறைச்சியும் தேவைப்படும்.
தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான சிங்கங்கள்உள்ளன. உலகில் தற்போது சுமார் 40 ஆயிரம் சிங்கங்களே இருக்கின்றன.
சிங்கங்கள் அதிகம் சோம்பல் கொண்ட விலங்காக கருதப்படுகின்றன. அவை நாளொன்றுக்கு 20 மணிநேரத்துக்கும் மேல் உறங்கும்.
பெண் சிங்கங்கள் 120 முதல் 182 கிலோ வரை எடை கொண்டதாகவும், ஆண் சிங்கங்கள் 150 முதல் 250 கிலோ வரை எடை கொண்டதாகவும் இருக்கும்.
சிங்கங்களின் பார்வை, மனிதர்களின் பார்வையைவிட 5 மடங்கு கூர்மையானதாக இருக்கும்.
சிங்கங்களால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடமுடியும்.
பெண் சிங்கங்கள் பெரும்பாலும் கூட்டமாகச் சென்றே வேட்டையாடும்.
சிங்கங்களால் நான்கைந்து நாட்கள்கூட தண்ணீர் குடிக்காமல் வாழ முடியும்.
ஆண் சிங்கங்களின் கர்ஜனை 5 கி.மீ. தூரம் வரைகூட கேட்கும்.