Published : 16 Aug 2021 03:20 AM
Last Updated : 16 Aug 2021 03:20 AM

பளிச் பத்து 47: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட் விளையாட்டின் தலைநகரமாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானம் 1814-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இந்த மைதானத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவரான ‘தாமஸ் லார்ட்ஸ்’ என்பவரின் நினைவாக இதற்கு லார்ட்ஸ் மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டது.

லார்ட்ஸ் மைதானம் மெரில்போன் கிரிக்கெட் கிளப்புக்கு (எம்சிசி) சொந்தமானது.

1884-ம் ஆண்டில் இந்த மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த மைதானத்துக்குள் கிரிக்கெட் சார்ந்த மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகப்பெரிய அளவிலான நூலகமும் உள்ளது.

2012-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடத்தப்பட்டன. அதேபோல, 2-வது உலகப் போரின்போது, நிதி திரட்டுவதற்காக இங்கு பேஸ்பால் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

1934-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இங்கு ஆடிய டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

1930-ல் இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் டான் பிராட்மேன் 254 ரன்கள் குவித்தார்.

இந்த மைதானத்தில் 3 சதங்கள் அடித்த ஒரே வெளிநாட்டு வீரர் என்ற பெருமை, இந்தியாவின் திலீப் வெங்சர்க்காருக்கு உண்டு.

லார்ட்ஸ் மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x