

ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பாகிஸ்தானின்மக்கள் தொகை 21.6 கோடியாகும்.
பாகிஸ்தானின் தேசிய மொழி உருது. ஆனால் அங்கு 7 சதவீதம் பேர் மட்டுமே இம்மொழியைப் பேசுகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, சமாதானத்துக்கான நோபல் பரிசையும், அப்துஸ் சலாம், இயற்பியலுக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பொதுமக்களில் 96.4 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.
அணு ஆயுத ஆற்றலைப் பெற்ற முதலாவது முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பானம் கரும்பு ஜூஸ்.
அதிக அளவிலான ராணுவ வீரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான்11-வது இடத்தில் (6.17 லட்சம் ராணுவ வீரர்கள்) உள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மசூதியாக ஷா ஃபைசல் மசூதி உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் தொழுகை நடத்த முடியும்.
கால்பந்து விளையாட்டில் அதிகம் ஈடுபடாவிட்டாலும், கால்பந்துகளை அதிகம் தயாரிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.