பளிச் பத்து 44: மிக்கி மவுஸ்

பளிச் பத்து 44: மிக்கி மவுஸ்
Updated on
1 min read

வால்ட் டிஸ்னி, இவர்க்ஸ் ஆகியோர் இணைந்து 1928-ம் ஆண்டில் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கினர்.

இந்த கதாபாத்திரம் முதல் முறையாக ‘ஸ்டீம்போட் வில்லி’ என்ற குறும்படத்தில் தோன்றியது.

திரைப்படங்களில் வெற்றி பெற்றதால், காமிக்ஸ்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றிலும் மிக்கி மவுஸ் இடம்பெறத் தொடங்கியது.

இந்த கதாபாத்திரத்துக்கு முதலில் மோர்டிமர் என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தது. வால்ட் டிஸ்னியின் மனைவிதான் அதற்குப் பதில் மிக்கி மவுஸ் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.

மிக்கி மவுஸ் தோன்றும் 121 திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

முதல் 2 மிக்கி மவுஸ் படங்களைத் தயாரிக்க 2,500 அமெரிக்க டாலர்கள் செலவானது.

1928-ம் ஆண்டுமுதல் 1947-ம் ஆண்டுவரை மிக்கி மவுஸ் கதாபாத்திரத்துக்கு வால்ட் டிஸ்னிதான் குரல் கொடுத்துவந்தார்.

மிக்கி மவுஸ், சீனாவில் ‘மி லாவ் ஷு’ என்றும், இத்தாலியில் ‘டோபோலினோ’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘ஒஸ்வால்ட்’ என்ற முயல் கதாபாத்திரத்துக்கு பதிலாக மிக்கி மவுஸ் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது.

மிக்கி மவுஸ் தோன்றிய முதல் வண்ணப் படம் ‘தி பாண்ட் கான்சர்ட்’. 1935-ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in