இன்று அன்று | 1992 பிப்ரவரி 1: தண்டிக்கப்படாத குற்றவாளி!

இன்று அன்று | 1992 பிப்ரவரி 1: தண்டிக்கப்படாத குற்றவாளி!
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 1984-ல் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு சம்பவத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது.

16,000-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கும், லட்சக்கணக்கானோரின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கும், தலைமுறை தலைமுறையாக உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமான அந்தச் சம்பவத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்ஸன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டெல்லியிலிருந்து பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் எடுக்கப்பட்ட பல முயற்சிகளுக்குப் பின்னர், 1992 பிப்ரவரி 1-ல் அவரை, ‘தேடப்படும் குற்றவாளி’ என்று அறிவித்தது போபால் நீதிமன்றம்.

அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. 2014 செப்டம்பர் 29-ல் தனது 93 வயதில் மரணமடைந்ததன் மூலம் தனது குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்காமலேயே தப்பினார் வாரன் ஆண்டர்ஸன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in