

அகஸ்டஸ் என்ற ரோமப் பேரரசரின் நினைவாக இம்மாதத்துக்கு ஆகஸ்ட் என்று பெயர் வந்தது.
ஆகஸ்ட் மாதம், முன்னதாக செக்ஸ்டிலிஸ் (Sextilis) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பழைய ரோமன் காலண்டரில் ஆகஸ்ட் மாதம், ஆண்டின் 6-வது மாதமாக இருந்தது.
304 நாட்களைக் கொண்டிருந்த ரோமன் காலண்டரில் சில ஆண்டுகளில் 30 நாட்களைக் கொண்ட மாதமாகவும், சில ஆண்டுகளில் 29 நாட்களைக் கொண்ட மாதமாகவும் ஆகஸ்ட் இருந்துள்ளது.
பல்வேறு நாடுகளிலும் ஆகஸ்ட் மாதம் அறுவடை மாதமாக விளங்குகிறது.
1900-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் கோகோ கோலா விற்பனையைத் தொடங்கியது. முதல் முறையாக இந்நிறுவனம் இங்கிலாந்தில் விற்பனையைத் தொடங்கியது.
1762-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதிதான், உலகில் முதல் முறையாக சாண்ட்விச் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவைப்போல் ஜமைக்கா, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ ஆகிய நாடுகளின் சுதந்திர தின விழாக்களும் ஆகஸ்ட் மாதத்தில் வருகின்றன.
ஸ்வீடன் நாட்டில் குழந்தைகளுக்கு பலரும் ஆகஸ்ட் என்று பெயர் சூட்டுகிறார்கள்.
இரண்டாம் உலகப் போர், ஆகஸ்ட் மாதத்தில்தான் முடிவுக்கு வந்தது.