பளிச் பத்து 37: ஆரஞ்சு

பளிச் பத்து 37: ஆரஞ்சு
Updated on
1 min read

ஆரஞ்சு பழத்தின் தலைநகரமாக பிரேசில் நாடு விளங்குகிறது. இங்குதான் அதிக அளவில் ஆரஞ்சு விளைகிறது. அங்கு ஆண்டுதோறும் 17.8 மில்லியன் டன் ஆரஞ்சு விளைகிறது.

ஆரஞ்சு பழம் முதலில் சீனாவில் விளைந்ததாக கூறப்படுகிறது.

கிமு 314-ம் ஆண்டில் எழுதப்பட்ட சீன இலக்கியங்களில் ஆரஞ்சு பழத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிட்ரஸ் பழங்களிலேயே அதிக அளவில் விளையும் பழமாகஆரஞ்சு உள்ளது.

ஆரஞ்சு பழங்களில் ‘வைட்டமின்-சி’ சத்து அதிக அளவில் உள்ளது.

ஒரு ஆரஞ்சு பழத்தில் சராசரியாக 12 கிராம் அளவுக்கு சர்க்கரைஇருக்கும். ஆனால் அதனால் உடலுக்கு தீங்கு நேராது.

ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் 600-க்கும் மேற்பட்ட ஆரஞ்சு வகைகள் உள்ளன.வாலென்சியா வகை ஆரஞ்சின் தோல் பச்சை நிறத்தில் இருக்கும்.

ஆரஞ்சு மரங்கள் 33 அடி உயரம் வரை வளரும்.

உலகில் உற்பத்தியாகும் ஆரஞ்சு பழங்களில் 80 சதவீதம்பழரசம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in