பளிச் பத்து 33: இரண்டாம் உலகப் போர்

பளிச் பத்து 33: இரண்டாம் உலகப் போர்
Updated on
1 min read

இரண்டாம் உலகப் போர் 1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகள் 3.4 மில்லியன் டன் குண்டுகளை ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

ஹிரோஷிமா, நாகசாகிக்கு அடுத்ததாக டோக்கியோ நகரின் மீதும் அணுகுண்டு வீச நேசநாட்டுப் படைகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அதற்குள் ஜப்பான் சரணடைந்தது.

இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டுகள் பலவும் இன்னும் ஜெர்மனியில் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

இப்போரில் அதிகம் பேரை இழந்தது சோவியத் யூனியன்தான். போரின்போது அந்நாட்டில் 26.6 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.

இரண்டாம் உலகப் போரில் சுமார் 70 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றதிலேயே இளம் வயது உடையவராக அமெரிக்காவின் கிரஹாம் கருதப்படுகிறார். அவர் 12 வயதில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போரின்போது 1.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறைந்து, சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஓங்கியது.

1940-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி முதல், தொடர்ந்து 57 நாட்களுக்கு லண்டன் நகரின் மீது குண்டுவீச்சு நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in