

ஜூலியஸ் சீசர் ஜூலை மாதத்தில் பிறந்ததால், இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.
இப்பெயர் வருவதற்கு முன்பு, ஜூலை மாதம் குயின்டிலிஸ் (Quintilis) என்று அழைக்கப்பட்டு வந்தது.
ஆண்டின் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஜூலை மாதம் வருவதால், ஐரோப்பியர்கள் பல நல்ல விஷயங்களை இம்மாதத்தில் தொடங்குவார்கள்.
ஜூலை மாதத்தில்தான் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தார்.
அமெரிக்க அதிபர்கள் பலர் (7 பேர்) ஜூலை மாதத்தில்தான் இறந்துள்ளனர்.
அமெரிக்க சுதந்திர தினம் ஜூலை மாதத்தில் வருகிறது.
மாவீரன் அலெக்சாண்டர், நெல்சன் மண்டேலா போன்ற சிறந்த வீரர்களும், தலைவர்களும் இம்மாதத்தில் பிறந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதத்தில்தான் அதிக வெப்பநிலை பதிவாகும்.
உலகின் முதல் அணுகுண்டு ஜூலை மாதம்தான் (1945, ஜூலை 16) பரிசோதிக்கப்பட்டது.
1885-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ரேபிஸ் தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது.