

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயலகம் கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது.
ஜாக் டோர்ஸே, பிஸ் ஸ்டோன், நோவா கிளாஸ், ஈவன் வில்லியம்ஸ் ஆகியோர் இணைந்து கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ட்விட்டர் வலைதளத்தை தொடங்கினர்.
2006-ம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் ட்விட்டர் செயல்பாட்டுக்கு வந்தது.
முதல் 3 ஆண்டுகளுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல் ட்விட்டர் இயங்கி வந்தது.
2020-ல் ட்விட்டர் நிறுவனத்தின் வருமானம் 3.72 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ட்விட்டர் நிறுவனத்தில் 2008-ம் ஆண்டில் 8 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். 2020-ம் ஆண்டில் இது 5,500-ஆக அதிகரித்தது.
ட்விட்டரில் 1.3 பில்லியனுக்கும் மேற்பட்டோர் தற்போது கணக்கு வைத்துள்ளனர்.
உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் ட்விட்டரில் இணைந்துள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளவர்களில் 28.4 சதவீதம் பேர் 35 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உலகத் தலைவர்களில் 83 சதவீதம் பேர் ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.