பளிச் பத்து 29: உருளைக்கிழங்கு

பளிச் பத்து 29: உருளைக்கிழங்கு
Updated on
1 min read

பெரு நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இன்கா இனத்தவர், முதன்முதலில் உருளைக்கிழங்கை பயிரிட்டதாகக் கூறப்படுகிறது.

1536-ம் ஆண்டில் ஸ்பெயின் நாடு பெரு மீது படையெடுத்தது. பின்னர் அந்நாட்டில் இருந்து திரும்பிச் சென்ற ஸ்பானிஷ் வீரர்கள் உருளைக்கிழங்கை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு உருளைக்கிழங்கு பரவியுள்ளது.

17-ம் நூற்றாண்டில் வர்த்தகத்துக்காக வந்த போர்ச்சுகீசியர்கள் மூலம் இந்தியாவுக்கு உருளைக்கிழங்கு அறிமுகமானது.

1675-ம் ஆண்டில் சூரத் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் முதல் முறையாக உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது.

சோளம், கோதுமை, அரிசி ஆகியவற்றுக்கு அடுத்ததாக உருளைக்கிழங்கு உலகில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

உருளைக்கிழங்கு உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் ரஷ்யாவும், இந்தியாவும் உள்ளன.

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ளன.

மஞ்சள், சிவப்பு மற்றும் ஊதா நிறங்களிலும் உருளைக்கிழங்குகள் உள்ளன.

உருளைக்கிழங்கில் இருந்து ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களும் தயாரிக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in