பளிச் பத்து 27: மாம்பழம்

பளிச் பத்து 27: மாம்பழம்
Updated on
1 min read

மாம்பழங்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

மாமரங்கள் காய்ப்பதற்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும்.

மாமரங்கள் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும்.

உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைகின்றன. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மாம்பழங்கள் விளைகின்றன.

உலகில் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின்தேசிய பழமாக மாம்பழம் உள்ளது.

புத்தர் மாமரங்களின் கீழ் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், அம்மரத்தை பவுத்த மதத்தினர் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

மாம்பழங்களால் கவரப்பட்ட மாவீரன் அலெக்சாண்டர், தன்னுடன் நிறைய மாம்பழங்களை கிரேக்க நாட்டுக்கு எடுத்துச் சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

முகலாயர்களின் ஆட்சி காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே மாமரங்களை வளர்க்க வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னர் இந்த தடையை ஷாஜஹான் நீக்கினார்.

2010-ம் ஆண்டில், வங்கதேசத்தின் தேசிய மரமாக மாமரம் அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in