Last Updated : 28 Feb, 2016 09:28 AM

 

Published : 28 Feb 2016 09:28 AM
Last Updated : 28 Feb 2016 09:28 AM

ஊதுறாய்ங்கப்பா ஊர்க்காரய்ய்ங்க! - வாசனுக்கும் வாசம் வரும்

சென்னை டி.எம்.எஸ். பஸ் ஸ்டாப்.. கட்சி அலுவலகத்துக்குப் போய்விட்டு வந்த வேகத்தில் தங்களது வேதனையை பஸ் ஸ்டாப்பிலேயே கொட்டிக் கொண்டிருந்த மது ரைக்கார த.மா.கா. நிர்வாகிகள் இருவரின் பேச்சில் இருந்து..

‘அப்பாரு நல்லவரு.. வல்லவருன்னு நம்பு னோம்.. அவரு தனியா பிச்சிக்கிட்டு வந்தப்ப, ஆஹா.. மக்கள் தலிவருப்பான்னு மார்ல தட்டிக்கிட்டு கூடமாட தனிக் கோஷ்டியா நின் னோம். கொஞ்சமாப் பேசுனாலும் எல்லார் கிட்டயும் கெட்டியா ஹோல்டு வச்சுக்கிட்டு நின்னாரு மக்கள் தலிவரு. அதே மாரித்தான் புள்ளயும் இருக்கும்னு நம்பி வந்தாக்கா..’

‘இப்பமே வெரக்தி வேணாம்ணே.. பொறுத் தால் பூமியாள்வார். வெறுத்தால் வெம்பிச் சாவார்’னு சும்மாவா பெரிசுங்க சொல்லிருக்கு.. காலம் கனியட்டும்.. நம்ம தலிவரும் பூமி ஆள்வார்ணே’

‘அதுக்கில்லப்பா.. நம்ம நிக்கிறப்பவே வெள்ள வேட்டி சட்டயில கறுப்பா பயங்கரமா ஒரு குரூப்பு வந்துச்சா.. வருங்கால முதல்வர் வாழ்க,

வருங்கால முதல்வர் மக் கள் தளபதி வாழ்கன்னு கத்துனாய்ங்களா.. ஒரு துண்ட போட்டாய்ங்களா.. காலேலர்ந்து காத்துக் கெடந்த நம்மள ஓரக்கண்ணால மொறச்சுப் பாத்து அப்டியே பேக்கப் பண்ணிட்டாரு பாத்தியா.. அடக்க ஒடுக்கமா அரசியல் பண்ணுன நம்ம தலிவரு மாரி ஆட்கள்லாம் இருந்த எடத்துல இருக்க முடியாமத்தான எகிறிக் குதிச்சு வெளில வந்தாங்க.. மொள்ளமா கட்சிய வளத்து ஆளாகலாம்ல.. அதுக்குள்ள கபால்னு மொதல்வரு ரேஞ்சுக்கு எவனாச்சும் வாசிச்சான்னா அத ரசிக்குறது நல்லால்லடா.. இதுக்கெல்லாம் அந்த டெல்லி கெஜ்ஜிரிவாலுதான்டா காரணம்’

‘ஏண்ணே.. மூக்குக்கும் முதுகுக்கும் முடிச்சு போடற?’

‘கச்சி ஆரமிச்சு கரஞ்சு போறது இப்டித் தாண்டா.. நம்மள பத்தி நாலு பேரு நல்லமாரி பேசு றாய்ங்கன்னதும் மக்கள துச்சமா மதிக்கிறது. டெல்லில நடக்கலியா.. ஏன் சென்னைல நடக் காதுங்கறது? வந்தவய்ங்க என்ன சொன் னாய்ங்கன்னு கவனிச்சியா? தலிவரே.. ஒங்க பின்னாடி 10 லட்சம் தொண்டய்ங்க இருக் காய்ங்கன்னு அடிச்சு வுட்றான். அவரு அப்டியே ரசிச்சு சிரிக்குறாரு.. ச்சேர நல்லா இழுத்துப் போட்டுட்டு பக்கத்துல போய் அவனும் குளோசப்ல சிரிக்குறான்.. வகுறு குமுறுதுல்ல..’

‘இதுக்குலாமா டென்சன் ஆவுறது.. தலிவருங்கன்னா அப்டித்தான் இருப்பாங்க.. புவழ்றவன அவங்களுக்குப் புடிக்கும்ணே.. கச்சி நிர்வாகிங்க நாமதான் உசாரா இருக் கணும். பின்னாடி 10 லட்சம்னா முன்னாடி ஒருத்தணுமே இல்லியே தலிவா.. அசலூருக்கு நாமதான அஞ்சாறு கார்ல ஆள தூக்கிப் போட்டுட்டுப் போயி கூட்டம் நடத்துறோம்.. கவனிச்சியான்னு தலிவரு காதுல காய்ச்சி ஊத்தணும். அப்பத்தாண்ணே கச்சி எந்தி ரிக்கும்..’

‘அடப் போடா.. அதெல்லாம் சொல்லியாத் தெரியணும்.. பீட்டரு அறிவாலயம் பக்கம் இழுத்துப் பாத்தாரு.. அதுக்குள்ள என்ன அவசரம்னு பதிலனுப்பி தலிவரு கெத்து காட்னாரு.. உண்மையான கெத்து எங்கன இருக்கு.. அறிவாலயத்துலதானப்பா இருக்கு.. அத்து வுட்டுட்டாங்க.. எஸ்ஸார்பி ஏடியெம்கே பெஸ்ட்டுனு சொன்னாரு.. நோகாம திங்கணும் நொங்கு.. செலவில்லாம ஆகணும் எம்.பி. அதுபோதும் எனக்குனு ரைமிங்கா தலிவரு சொல்லிட்டுத் திரிஞ்சாரு.. அவரோட சித்தப் பாவும் மச்சானும் ஒரத்தநாட்டுக்காரர் மூலமா அதயே ஏடியெம்கேல டிமாண்டா வச்சிருக் காங்க.. ஆஹா.. எங்களுக்கேவா? ஆங்கிலத் துல புடிக்காத வார்த்த ‘டிமாண்டு’னு சொல் லிட்டாங்க.. போனவாட்டி கம்யூனிஸ்ட்டுக்கு குடுத்த ஒன்பது கெடச்சா ஓகேன்னு சொல் லிட்டு ஓஹோன்னு வாழலாம்ல.. இப்ப எலவு காத்த கிளியால்ல காத்துக் கெடக்காரு..’

‘வாழ்க்கய்ல வழுக்கக் கூடாது; அரசியல்ல சலிக்கக் கூடாதுண்ணே.. கப்பல் செல்வாக்கு நம்மளயும் கர சேக்கும்னு நம்பித்தான தாய்க்கட்சிய வுட்டுட்டு இங்கன வந்தம்.. பாலிடிக்ஸ்ல பாத்துப் பாத்துக் காத்ருக்கறதும் ஒரு கலண்ணே..’

‘எல்லாக் கட்சிலயும் காச கட்டிட்டு எந்த ரூட்ல புகுந்து சீட்ட வாங்கலாம்னு மடில பணத்தக் கட்டி வச்சுக்கிட்டு அலையுறான்.. இங்க என்னடான்னா.. ஏடியெம்கேனா எம்புள் ளைக்கு சீட்டு குடு தலிவாங்கறாரு தேசிகன். எனக்குமாக்கும்னுட்டு தவ்வி வர்றாரு தங்கம்.. ஆனா, ம.ந.கூ.ல பேசுறாங்கப்பா. வைகோ ரொம்பப் பிரியப்படறாருனு தலிவரு சொன்னா.. கஷ்டத்துல நம்மகூட நின்ன கச்சிக்காரனுக்கு சீட்டு குடுக்கணும் தலிவரேன்னுட்டு நைசா எகிறிடறாங்க.. நாலு நா கச்சி ஆபீஸ் பக்கமே வரமாட்டேன்றாங்க..’

‘அண்ணே.. எம்புட்டு வேதனய அடக்கி வச்சுருந்திருக்கீங்க.. உங்கள மாரி நிர்வாகிங்க தலிவரு கூடவே இருக்கணும்னே.. மொள்ளமா எடுத்துச் சொல்லி இந்த காங்கிரசயும் அந்த காங்கிரசு கணக்கா வளத்துப்புடணும்னே’

‘ஒனக்கு மட்டும் எங்கர்ந்துடா இம்புட்டு நம்பிக்க.. அவரு பிஜேபி கூடயும் பேசு றது தெர்யுமா.. தெர்யாதா? அது எக்ஸ்ட்ரா

வேதனடா.. வெசயகாந்த் எப்டியாச் சும் அவரு போற எடத்துக்கு என்னயும் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக் கார்னு கூச்சமே இல்லாம சொல்றாருடா.. எனக்கு அழுகயே வந்துர்ச்சு தெர்யுமா?’

‘அண்ணே.. அது வேறயா? இன்னும் யார் யார்கிட்ட கூட்டு சேர ஆசப்படறாரு நம்ம தலிவரு?’

‘அடுத்த ஸ்டேட்ல போய் பேசுற அள வுக்கு அவருக்கு வாய்ஸ் பத்தாது.. இருந்தா இந்நேரம் அதுக்கும் டிரய் பண்ணிருப்பாரு.. பேச்சு பேச்சா இருக்கு.. இந்த நிமிஷத்துல அவருக்கு வெசயகாந்தும் வைகோவும் மட்டுந்தான் ஆஞ்சநேயர்களா ஆபத் பாந்தவர்களா தெரியுறாங்க.. எங்க யாச்சும் தூக்கிட்டுப் போய் வச்சு வாழ்க்க குடுப்பாங்கன்னு நெனய்க்கிறாரு.. கார்டன் சொன்னத கேக்கத் தயாருன்னா அங்கன கதவு தொறக்க வாய்ப்பு இருக்கு.. ஆனா என்ன.. பீட்டரு பிச்சுக்குவார்னு நெனய்க்கி றேன். நிலையில்லாத கச்சி வாழ்க்கை.. வெறுத்துப் போச்சு தம்பி..’

‘இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்கண்ணே.. வாடாமல்லிக்கும் ஒரு நா வாசம் வரும்னு நம்புங்கண்ணே.. நம்ம மக்கள் தளபதி வாசன் அய்யாவுக்கும் நல்ல வாய்ப்பு வரும். மெயின் காங்கிரஸ மிஞ்சி நாமளும் சைன் பண்ணுவோம்னே..’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x