

சீனப் பெருஞ்சுவர் 21,196 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது சீனாவின் 9 மாகாணங்களில் பரந்து விரிந்துள்ளது.
இச்சுவரின் சராசரி உயரம் 7.88 மீட்டர். ஒரு சில இடங்களில் இச்சுவர் 14 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பாக சீனப் பெருஞ்சுவர் உள்ளது.
சீனப் பெருஞ்சுவரை கட்டும் பணியை கின் ஷி ஹாங் (கிமு 260 - 210) என்ற மன்னர் தொடங்கிவைத்துள்ளார்.
இச்சுவரை கட்டும் பணியின்போது சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்ட மன்னர்கள், இச்சுவரின் பல்வேறு பாகங்களை கட்டி முடித்துள்ளனர்.
சீனப் பெருஞ்சுவரை கட்டும்போது, கற்களின் இணைப்பு பலமாக இருக்க அரிசிக் கஞ்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.
சீனப் பெருஞ்சுவரை நிலவில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது தவறு. தொலைநோக்கி மூலம்தான் பார்க்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க வருகின்றனர்.
இச்சுவரின் பல இடங்களில் சீனாவின் போர்க்கடவுளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது