பளிச் பத்து 16: பென்சில்

பளிச் பத்து 16: பென்சில்
Updated on
1 min read

ஒரு பென்சிலை வைத்து சராசரியாக 45 ஆயிரம் எழுத்துகளை எழுத முடியும். அல்லது 35 மைல் நீளத்துக்கு கோடுபோட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு மரத்தில் இருந்து 3 லட்சம் பென்சில்களைத் தயாரிக்க முடியும்.

தாமஸ் ஆல்வா எடிசன் பயன்படுத்திய பென்சில், மற்றவர்களின் பென்சிலை விட வித்தியாசமானதாக இருந்தது. அவை அழுத்தமாக எழுதக்கூடியதாக இருந்தது.

பென்சில்கள் பெரும்பாலும், மரம், கிராபைட் மற்றும் களிமண்ணைக் கலந்து தயாரிக்கப்படுகின்றன.

சில பென்சில்கள், கார்பன், கரி ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன.

உலகின் பென்சில் தேவையில் 50 சதவீதத்தை சீனா பூர்த்தி செய்கிறது. அங்கு ஆண்டொன்றுக்கு 10 பில்லியன் பென்சில்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.

எரேசர்களை (அழிப்பான்கள்) கண்டுபிடிக்கும் முன்பாக பென்சில்களால் எழுதப்பட்ட தவறான வார்த்தைகளை அழிக்க ரொட்டித் துண்டுகளை ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர்.

உலகின் பல்வேறு நாடுகளில், மார்ச் 30-ம் தேதி பென்சில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள லேக் டிஸ்டிரிக்ட் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில்பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பென்சில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பென்சிலை கூர்மைப்படுத்த பயன்படுத்தப்படும் ஷார்ப்பனர்,1828-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in