பளிச் பத்து 13: கொசு

பளிச் பத்து 13: கொசு
Updated on
1 min read

எல்லா கொசுக்களும் மனிதர்களைக் கடிப்பதில்லை. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும்.

மனிதர்களை கடிக்காமல், விலங்குகள் மற்றும் பறவைகளை மட்டுமே கடிக்கும் பெண் கொசுக்களும் உள்ளன.

கொசுக்களால் வேகமாக பறக்க முடியாது. அதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 1.5 கிலோமீட்டர்தான்.

அமெரிக்க கொசு கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் கணக்குப்படி உலகில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளன.

கொசுக்களுக்கு ஆயுள் குறைவு. 5 முதல் 6 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும்.

கொசுக்கள் ஒரே நேரத்தில் தங்கள் உடல் எடையைவிட மூன்று மடங்கு ரத்தத்தைக் குடிக்கும்.

கொசுக்கள் தங்கள் சிறகுகளை விநாடிக்கு 300 முறைக்குமேல் அடிப்பதால்தான் அது பறக்கும் சத்தம் அதிகமாக கேட்கிறது.

கொசுக்கள் முட்டையிடுவதற்கு தண்ணீர் அவசிய தேவையாக உள்ளது.

சில அங்குலம் பரப்பளவுக்கு தண்ணீர் இருந்தால்கூட கொசுக்களால் முட்டையிட முடியும்.

கொசுக்கடியால் ஏற்படும் மலேரியா காய்ச்சலால் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in