பளிச் பத்து 10: ரயில்

பளிச் பத்து 10: ரயில்
Updated on
1 min read

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 8,421 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853-ம் ஆண்டு மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை 1986-ம் ஆண்டில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது.

முதல் மின்சார ரயில், மும்பை விக்டோரியா டெர்மினலுக்கும் குர்லாவுக்கும் இடையே 1925-ம் ஆண்டில் இயக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயில் 14 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் மெதுவாக ஓடும் ரயில், நீலகிரி மலை ரயிலாகும். இது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

மிகப்பெரிய ரயில் நிலையம் மதுராவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திப்ரூகரில் (அசாம்) இருந்து கன்னியாகுமரிக்கு வரும் ரயில்தான் இந்தியாவில் மிக நீண்ட தூரம் (4,226 கிலோ மீட்டர்) செல்லும் ரயிலாகும்.

நாட்டின் பரபரப்பான ரயில் நிலையமாக ஹவுரா உள்ளது. இங்கு நாள்தோறும் 974 ரயில்கள் வந்து செல்கின்றன.

இந்தியாவில் சென்னை, திருச்சி உட்பட 8 இடங்களில் ரயில்வே மியூசியங்கள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in