பளிச் பத்து 08: டெல்லி செங்கோட்டை

பளிச் பத்து 08: டெல்லி செங்கோட்டை
Updated on
1 min read

டெல்லி செங்கோட்டை 1648-ம் ஆண்டு ஷாஜகானால் கட்டப்பட்டது.

ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு ஷாஜகான் தலைநகரை மாற்றியபோது, செங்கோட்டை கட்டப்பட்டது.

செங்கோட்டை 256 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் செங்கோட்டை வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. பிற்காலத்தில் இக்கட்டிடத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய அரசு, அதற்கு சிவப்பு நிற வண்ணத்தை பூசியுள்ளது.

செங்கோட்டையின் நிஜப் பெயர் ‘கிலா-கி-முபாரக்’. பிற்காலத்தில் அதன் சிவப்பு நிறம் காரணமாக செங்கோட்டை என பெயர் பெற்றது.

உஸ்தாத் அஹமத் லாஹுரி என்ற கட்டிடக்கலை வல்லுநர்தான் டெல்லி செங்கோட்டையை வடிவமைத்தார்.

முதல் சுதந்திர தினம் முதல் இதுவரை, டெல்லி செங்கோட்டையில்தான் பிரதமர்கள் கொடியேற்றி வருகின்றனர்.

டெல்லி கேட், லாகூர் கேட் என செங்கோட்டைக்கு 2 வாயில்கள் உள்ளன.

இக்கோட்டையில் லாகூர் கேட் வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முக்கியஸ்தர்கள் மட்டுமே டெல்லி கேட் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக 2007-ம் ஆண்டில் செங்கோட்டை அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in