நெட்டிசன் நோட்ஸ்: தல தோனி பிறந்த நாள் 

நெட்டிசன் நோட்ஸ்: தல தோனி பிறந்த நாள் 
Updated on
1 min read

தல, கூல் கேப்டன், கிரேட் ஃபினிஷர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் 40-வது பிறந்த நாள் இன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் தோனிக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டும், தோனியின் புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிட்டும், ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் சில பதிவுகள்:

சிட்டிசன் லிங்கா

தல ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் தல தோனி.

அசால்ட்டு சேது

தலைவா வெற்றியோ தோல்வியோ நீ கொடுத்தது அனைத்தும் நினைவுகள், நீடுழி வாழ்க தலைவா!

THUG 1

எந்த சேவல் பந்தயம் அடிக்கும்னு என் தலைவனுக்குத் தெரியும்
#HappyBirthdayDhoni

ஜெகநாதன் ஆர்

கூல் கேப்டன் தோனி...

பிறந்த நாள் வாழ்த்துகள் தல!

THARANI PRABHU

28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த தேசத்தின் கனவாய் உலகக் கோப்பையை வாங்கித் தந்த தன்னலமற்ற தலைவன் கேப்டன் தோனி.

சாந்தகுமார்

ஆட்டத்தின் பரபரப்பான இறுதி நிமிடங்களில் கூட எவ்விதப் பதற்றமுமின்றி அமைதியாக வெற்றியை ஈட்டித் தந்தவராகவும். அதிகமான கோப்பைகளை தனதாக்கித் தந்தவராகவும் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்ற #தோனிக்கு இனிய #பிறந்த_நாள்_நல்வாழ்த்துகள்.

Anandh

இன்னொரு தோனி எல்லாம் எப்பவும் வாய்ப்பே இல்ல! தலைமைல மட்டும் இல்லை, தலைக்கனம் இல்லாத குணத்துலயும் தோனி..

HBD Thalaivaaaa ℳsd

ரெக்கார்டு பற்ற Players வரலாம் போலாம்...தோனி மாதிரி சாம்பியன் Playerஆ வர்றது ரொம்ப கஷ்டம்...

தல ViNo MSD

மறுபடியும் உன்னைய இந்திய ஜெர்சில ஒரு முறையாவது பாக்க மாட்டோமானு ஆசையா இருக்கு தலைவா!

விநிதன்

இருக்கும் போது யாருடைய அருமையும் தெரியாது.

சிறந்த எடுத்துக்காட்டு "தோனி".

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in