பளிச் பத்து 06: காகிதம்

பளிச் பத்து 06: காகிதம்
Updated on
1 min read

உலகின் முதல் காகிதம், 1,900 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்டது.

பேப்பர் எனும் வார்த்தை ‘பேப்பிரஸ்’ என்ற எகிப்து வார்த்தையில் இருந்து பிறந்தது.

ஒரு பைன் மரத்தில் இருந்து 80,500 காகித ஷீட்களை தயாரிக்கலாம்.

உலகில் வெட்டப்படும் மரங்களில் 42 சதவீதம் மரங்கள், காகிதங்களைத் தயாரிப்பதற்காக வெட்டப்படுகின்றன.

மரங்களில் இருந்து மட்டுமின்றி, சில வகை பருத்திகளில் இருந்தும் காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒரு ஏ-4 ஷீட் காகிதத்தை உருவாக்க 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இதுவே பழைய காகிதத்தை மறுசுழற்சி செய்து புதிய காகிதத்தை தயாரிக்க 85 சதவீதம் அளவுக்கு குறைந்த தண்ணீரே தேவைப்படும்.

உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் 409 மில்லியன் மெட்ரிக் டன் காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் உருவாகும் குப்பைகளில் 40 சதவீதத்துக்கும் மேல் காகிதங்களாலான குப்பைகளாக உள்ளன.

காகிதங்களை அதிகம் தயாரிக்கும் நாடாக சீனா உள்ளது. உலகத்தின் காகித தேவையில் 25 சதவீதத்தை அந்நாடு பூர்த்தி செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in