மழை முகங்கள்: நிஜ நாயகர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம்

மழை முகங்கள்: நிஜ நாயகர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம்
Updated on
1 min read

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

*

காலில் சக்கரத்தைக் கட்டியதுபோல சுற்றிச்சுழல்கிறார்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம். மூவருமே சிறுவர்கள். அசோக் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அர்ஜுனும் ஆறுமுகமும் ஐந்தாவது படிக்கிறார்கள்.

“தம்பிங்களா நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். ஓரமா உட்காருங்க” என்று சொன்னாலும் கேட்பதாக இல்லை. “அண்ணே எங்களுக்காக எங்கிருந்தோ எல்லாம் வந்து வேலை செய்யறாங்க. நாங்களும் செய்யறோம்ண்ணே” என்கிறார்கள்.

பட்டியலைப் பார்த்து பகுதி வாரியாக தேவைப்படும் பொருட்களை அசோக் வாசிக்கிறான். அவற்றை அர்ஜுனும் ஆறுமுகமும் அட்டைப் பெட்டிகளில் எண்ணி அடுக்குகிறார்கள்.

ஆனால், மூவரின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. மூவரின் வீடுகளுமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. வத்தலகுண்டுவிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த குடும்பம் இவர்களுடையது. மூவரின் குடிசைகளும் சேப்பாக்கம் ரயில் பாலத்துக்கு கீழே கூவம் கால்வாய்க்கு ஒட்டியே இருந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் அத்தனையும் அடித்துச் சென்றுவிட்டது.

இப்போது சில சணல் பை தடுப்புகள் ஒரு டிஜிட்டல் பேனரும்தான் இவர்களின் தற்காலிக வசிப்படமாக இருக்கிறது. ஆனால், அந்த சோகம் கொஞ்சமும் இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள் சிறுவர்கள். “அய்யோ அண்ணா, அன்னைக்கு பயங்கரமான மழைன்னா. தூங்கிட்டிருந்தப்ப குடிசையோட தண்ணி இழுத்துட்டுப் போயிடுச்சு. அடிச்சுப் புடிச்சி நீந்தி வந்தோம். இங்க கொடுத்த பாயும் போர்வையும் ரெண்டு நாளா உதவியா இருக்கு” என்கிறார்கள் சிறுவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in