

முதல் உலகப் போரினால் நேரடியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. காயமடைந்தவர்கள், உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில்லாதது. போரில் பங்குபெற்ற வீரர்கள் சந்தித்த இன்னொரு பாதிப்பு ஒன்று உண்டு.
1917 டிசம்பர் 4-ல் ஸ்காட்லாந்தில் உள்ள க்ரெய்க்லாக்ஹார்ட் போர் மருத்துவமனையில் நடத்திய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார் பிரபல உளவியல் நிபுணர் டபிள்யூ.ஹெச். ரிவர்ஸ். தங்கள் அருகில் வெடித்த வெடிகுண்டுகள் தந்த அதிர்ச்சி காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அது.
அந்த பாதிப்புக்கு ‘ஷெல் ஷாக்’ என்று அழைக்கப்பட்டது. பிரிட்டன் ராணுவத்தில் மட்டும் சுமார் 80,000 பேருக்கு இந்த பாதிப்பு இருந்தது. இவர்களுக்குத் தகுந்த சிகிச்சை யளித்து மீண்டும் பணிக்கு அனுப்பும் பணி டபிள்யூ.ஹெச். ரிவர்ஸ் உள்ளிட்ட மருத்துவர் களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும், ஐந்தில் ஒரு பகுதி வீரர்கள் மட்டும்தான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. - சரித்திரன்.