இன்று அன்று | 1865 டிசம்பர் 24: அமெரிக்க உள்நாட்டுப் போர்

இன்று அன்று | 1865 டிசம்பர் 24: அமெரிக்க உள்நாட்டுப் போர்
Updated on
1 min read

அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்த ஆண்டு 1865. அமெரிக்க உள்நாட்டுப் போர் அந்த ஆண்டில்தான் முடிவடைந்தது.

அடிமைகளாக வேலைபார்த்த ஆப்பிரிக்கத் தொழிலாளர்களுக்கு விடுதலை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல், உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

அதே ஆண்டில், கருப்பின மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை அதிபர் ஆண்ட்ரூ ஜான்ஸன் தலைமையிலான அரசு மேற்கொள்ளத் தொடங்கியது.

அதே ஆண்டு டிசம்பர் 24-ல், நிறவெறி கொண்ட வெள்ளையினத்தவர்கள் சேர்ந்து ‘கு க்ளக்ஸ் க்ளான்’ எனும் ரகசிய அமைப்பைத் தொடங்கினர். கருப்பின மக்களைக் கொல்வதுதான் இவர்கள் நோக்கம்.

பல கொலைகளை நிகழ்த்திய இந்த இந்தக் கும்பல் சட்டவிரோதம் என்று 1880-களின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

1950-களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைப் போராட்டங்கள் நடந்தபோது, மீண்டும் இதேபோன்ற கும்பலை உருவாக்க முயற்சிகள் நடந்தது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in