இன்று அன்று | 1991 டிசம்பர் 25: சோவியத் யூனியனின் முடிவு

இன்று அன்று | 1991 டிசம்பர் 25: சோவியத் யூனியனின் முடிவு
Updated on
1 min read

1985-ல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் அதிபராகப் பதவியேற்ற காலம் சோதனைக் காலம். அமெரிக்காவுடனான நீண்ட கால மோதலால் சோவியத் யூனியனின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் இருந்தது. அந்நாட்டின் குடிமக்களில் ரஷ்யர்கள் அல்லாத பலர் தாங்கள் ஒடுக்கப்படுவதாக வேதனை அடைந்தனர்.

பேச்சுரிமைக்கும் பொருளாதார உரிமைக்கும் தடை விதித்த தீவிர கம்யூனிசக் கொள்கையால் பலர் விரக்தியடைந்திருந்தனர். சூழலை உணர்ந்த கோர்பசேவ் மக்களுக்குப் பேச்சுரிமைக் கொள்கையான ‘க்ளாஸ் நாஸ்ட்’வையும் புதிய பொருளாதாரக் கொள்கையான ‘பெரெஸ்ட்ரோய்கா’வையும் அறிமுகப்படுத்தினார். ஆனால், எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியா, உக்ரைன் போன்ற பகுதிகள் தனி நாடு கேட்டுப் புரட்சியில் இறங்கின.

மறுபுறம் தீவிர கம்யூனிஸ்ட்கள், கட்டுப்பாடுகளைத் தளர்த்திய கோர்பசேவை கடத்தினர். ஆட்சி ஸ்தம்பிக்கவே ஒரு கட்டத்தில் விடுவித்தனர். ஏழு ஆண்டுகள் சோவியத் யூனியனின் அதிபராகச் செயல்பட்ட கோர்பசேவ், 1991 டிசம்பர் 25-ல் தன் ராஜினாமாவை அறிவித்தார். உடனடியாக உக்ரைன் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களிலேயே சோவியத் யூனியன் எனும் சர்வாதிகார நாடு உடைந்து பதினைந்து தனித்தனி சுதந்திர நாடுகள் உருவாயின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in