Last Updated : 30 Nov, 2015 11:57 AM

 

Published : 30 Nov 2015 11:57 AM
Last Updated : 30 Nov 2015 11:57 AM

இன்று அன்று | 1835 நவம்பர் 30: வாசகரின் நண்பர்

கேலியும் கிண்டலும் நையாண்டித் தனமும் நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் மார்க் டுவைன்.

அவருடைய உலகப் புகழ்பெற்ற நாவல்களான ‘தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்’, ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஹக்குள்பெர்ரி ஃபின்’ வாசகர்களைச் சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தக்கூடியவை. நவம்பர் 30, 1835-ல் ஃபுளோரிடா மாகாணத்தில் சாம்வெல் லாங்ஹார்ன் கிளிமென்ஸ் ஆகப் பிறந்து ‘மார்க் டுவைன்' எனும் புனைபெயர் மூலம் எழுத்துலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த அமெரிக்கர் அவர்.

அவருடைய இளமை துயர் நிறைந்தது. தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையே சுவாரஸ்யமாக மாற்றி எழுதத்தொடங்கினார்.

34 வயதில் உலகம் அறிந்த பத்திரிகையாளர் ஆனார். நாவலாசிரியராக, சீரிய பத்திரிகையாளராக, சாகசப் பயணியாகப் புகழப்படும் மார்க் டுவைன் தன் வாழ்வில் புகழின் உச்சத்தையும் துயரின் ஆழத்தையும் சந்தித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x