

பிரபல எழுத்தாளர்
இயற்கையான சூழல்னு விளம்பரம் போட்டீங்களே, வூட்டுக்குள்ள பாம்புலாம் வரும்னு சொன்னீங்களாடா?
கருப்பு கருணா
ஏம்பா... இங்க ஒரு மாநிலமே வெள்ளக்காடா கெடக்கு. ஜனங்க அல்லாடுது. உத்தராகண்ட் வெள்ளத்துல ஓவர்நைட்டுல பதினஞ்சாயிரம் பேரைக் காப்பத்தியவரு எங்கப்பா ஆளையே காணோம்?
இந்தியாவுக்கும் ஒரு விசிட் அடிக்கச் சொல்லுங்கப்பா!
கவிஞர் மகுடேசுவரன்
மழையே பெய்யாதே. நில். முத்தமே என்றாலும் தொடர்ந்து பெற முடியாது!
அதிஷா
மாரளவு தண்ணில பைக் ஓட்றவன
மாடில நின்னு மாஞ்சு மாஞ்சு போட்டோவும் வீடியோவுமா எடுக்குறானுங்க. ‘சார் முகம் தெரியல’னு சவுண்டு வேற...
நீங்கள்லாம் அண்ணன் தம்பியோட பொறக்கலையாடா?
அதிஷா
Right now வருணபகவான் in சென்னை
‘தெறிக்கவிடலாமா’
சக்கரவர்த்தி பாலசுந்தரம்
வேளச்சேரியில பிளாட் வாங்குறவங்க
இப்பவே வாங்கிடுங்க...
குறைந்த விலையில் விக்குறாங்களாம்.
வெயில் வந்துட்டா, இவங்களுக்குக்
கொம்பு முளைச்சிடும்.
ராஜசேகர் மனோகரன்
வேதாளம் படம் பார்த்துவிட்டு, விஜய் நடிப்பு சரியில்லை என்பதுபோல, இன்னும் திமுகவையே விமர்சித்துக்கொண்டிருக்கிறோம்.
அம்மா வாழ்க!
அதிமுக வாழ்க!!
ராஜேஷ் பலவேஷம்
இந்த ரணகளத்துலயும் வேதாளம் வசூல் பாதிக்குமோன்னு ரசிகக்குஞ்சுங்க கவலைப்பட்டுட்டு இருக்க.. ‘‘அப்படி ஆகாது... தலடா”ன்னு ஒருத்தன் உணர்ச்சிவசப்பட, விஜய்-59 பட ஷூட்டிங் அடாது மழையிலையும் விடாது தொடருவதாக அட்லீ அப்டேட் செய்ய… அத விஜய் ரீ-ட்வீட் பண்ணிருக்கார். இவங்க உலகமே வேற!
குரங்கு குப்பன்
மழை வெள்ளம் பத்தி அக்கறையா ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருந்த பசங்க பூரா, இன்னிக்கு நயன்தாராவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்றானுங்க # தமிழன் என்றோர்…
சி.பி. செந்தில்குமார்
அமைச்சரே! மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரிண்ட் பண்றோம்!