

வாழ்க்கைதான் என்னைக் குழந்தை எழுத்தாளனாக ஆக்கியது. ஓவியனாக வேண்டும் என்றுதான் இளம் வயதில் ஆசைப்பட்டேன். அதுதான் என் கனவாக இருந்தது. அதே கனவுடன்தான் பத்திரிகைத் துறையிலும் நுழைந்தேன்.
வானவில் பத்திரிகைக்காகத்தான் நான் வாண்டுமாமா ஆனேன்.
குழந்தைகள் இலக்கியம் என்பது ஒரு தனி உலகம். பெரியவர்களுக்கான உலகின் தர்க்க நியாயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது அது. குழந்தை எழுத்தாளன் ஒருவகையில் தானே குழந்தையாகிவிடுகிறான். காலமெல்லாம் குழந்தையாக இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்!
இந்தக் காலக் குழந்தைகள் பாவம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்களுக்கென்று எழுத யாருமே இல்லையே. நவீன சாதனங்களின் வளர்ச்சி வரவேற்கக் கூடியதுதான். எனினும், அவைதான் வாழ்க்கை என்றால் அது என்ன வாழ்க்கை?
உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். படிக்கச் சொல்லுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள்.