

பணவீக்கம் தொடர்பாக பொரு ளாதார நிபுணர் குண்டலகேசி நமக்கு செல்போன் மூலம் விளக்கம் அளிக் கிறார். இனி அவரது பேட்டி தொடர் கிறது. (இனி: நி=நிருபர், கு=குண்டல கேசி)
நி: பணவீக்கம் என்றால் என்ன சார்?
கு: சில பேரு இதை வெளியில சொல்ல வெட்கப்படறாங்க. இதுல வெட்கப் படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. காத்து ஊத ஊத பலூன் வீங்குற மாதிரி..
நி: விலை வீங்குறதால பணவீக்கம் ஏற்படுதுன்றீங்க. சரி, விலை ஏறிப் போன உணவுப் பொருள், காபி, டீ, மீன், காய்கறிக்கும் இதுக்கும் சம்பந் தம் இருக்கா?
கு: அப்படி பொதுவா சொல்ல முடி யாது. ஆனா, கொத்தமல்லி, புளியங் கொட்டை தோல், ஆடுதீண்டாப்பாளை, கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
நி: சார், டவர் பிராப்ளம்.. சரி, அடுத்த கேள் விக்குப் போகலாம். கடந்த ஆட்சியி லும் இதே பிரச்சினை இருந்துச்சே.
கு: இது பரம்பரைக் கோளாறு இல்லை.
நி: சார், விட்டு விட்டு கேக்குது. மத் திய அரசோட பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளால இந்த பிரச் சினை சரியாகும்றீங்களா? தொழில், உற்பத்தி துறையில கவனம் செலுத்த வேண்டுமா?
கு: சவ்வுச் சுரப்பு நீர் அதிக உற்பத்தி யாலக்கூட இருக்கலாம். ஆனா, சாதா ரண நடவடிக்கை பத்தாதுங்கிறது என் கருத்து. ஆபரேஷன்தான் ஒரே வழி.
நி: (பதிலே சரியில்ல.. மஞ்சக் கலர், ரோஸ் கலர் நோட்டீஸ் கணக் காவே பேசிட்டிருக்காரே) மன்னிக் கவும்! பொருளாதார நிபுணர் குண்டல கேசியின் நம்பருக்கு பதிலாக பரம்பரை வைத்தியர் நாடிவைத்திய சிகாமணி குண்டலகேசிக்கு போன் போட்டதற்கு வருந்துகிறோம்.