Published : 21 Nov 2020 05:36 PM
Last Updated : 21 Nov 2020 05:36 PM

நிறுவனங்களின் லோகோக்களை வேகமாக அடையாளம் காட்டும் சிறுவன்: ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டில் சாதனை

208 வகை நிறுவனங்களின் லோகோக்களை, 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிறுவன் ஏசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து சாதனைப்படைத்துள்ளார்.

மதுரை கூடலழகர் நகர் அதிகள் முகாமை சேர்ந்தவர் பிரவீன். இவர் டைபிஸ்ட்டாக பணிபுரிகிறார். இவரது மகன் ப்ரஜன், யுகேஜி படிக்கிறார். படிப்பில் கெட்டிக்காரரான இவர், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் லோகோக்களை சற்றும் யோசிக்காமல் பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறார்.

தன்னுடைய இந்த திறமைகளை ஒரு வீடியோவாக பதிவு செய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் லோகோக்களை 2 நிமிடம் 14 செண்ட்டில் அடையாளப்பத்தி சொல்லியிருந்தார்.

இவரது சாதனைய அங்கீகரித்து, அந்த புத்தகத்தில் ப்ரஜனின் நிறுவனங்களின் லோகோக்களை அடையாளப்படுத்தும் திறமையை அடையாளப்படுத்தியுள்ளது.

இதற்கு முன் இண்டியா புக் ஆப் ரெக்கார்டில் மட்டுமே ஒருவர் இத்தகைய ஒரு சாதனையை நிகழ்த்திருந்தார்.

அதில் அவர், 178 நிறுவனங்களின் லோகோக்களை 3 நிமிடம் 49 நொடிகளில் அடையாளப்படுத்தியிருந்தார். அதை விட அதிகமான நிறுவனங்கள் லோக்களை, குறைவான நேரத்தில் ப்ரஜன் அடையாளப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் பிரவீன் கூறுகையில், ‘‘90ம் ஆண்டில் இந்தியா வந்தோம். இலங்கை அகதிகள் முகாமில்தான் வசிக்கிறோம். எங்கள் குழந்தைகளும் பன்முக திறமை கொண்டவர்கள் என்பதையும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்திற்காக இதுபோன்ற அறிவுசார் போட்டிகளில் எனது குழந்தையை பங்கெடுக்க வைத்து வருகிறேன். திறமையான இலங்கை அகதிகள் குழந்தைகளை அடையாளப்படுத்தி அவர்களுக்கான படிப்பிற்கு உதவ வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x