இன்று அன்று | 1858 அக்டோபர் 27: அமைதி விருது வென்ற முதல் அதிபர்!

இன்று அன்று | 1858 அக்டோபர் 27: அமைதி விருது வென்ற முதல் அதிபர்!
Updated on
1 min read

அமெரிக்கர்களின் அபிமானத்துக்குரிய அதிபர்களில் ஒருவர் தியோடர் ரூஸ்வெல்ட். 1858 அக்டோபர் 27-ல் பிறந்தவர்.

வசதியான குடும்பம். இளம் வயதிலேயே ஆஸ்துமா பாதிப்பு இருந்தது. மனவுறுதி கொண்ட ரூஸ்வெல்ட், உடல் பலத்தை அதிகரிக்க எக்கச்சக்கப் பயிற்சிகளை மேற்கொண்டார். கடுமையான உழைப்புக்கும் அபாரமான நினைவாற்றலுக்கும் பெயர்பெற்ற இவர், 1901-ல் அமெரிக்க அதிபரானார். 35 புத்தகங்களையும், 1,50,000 கடிதங்களையும் எழுதும் அளவுக்கு ஆற்றலுடன் செயல்பட்டார்.

செவ்விந்தியர்கள், கருப்பினத்தவர்கள் விஷயத்தில் அத்தனை பரந்த மனதுடன் செயல்பட்டவர் அல்ல என்றாலும், அரசுப் பணிகளில் கருப்பினத்தவர்கள் பலரைப் பணியமர்த்தினார். அமெரிக்கக் கடற்படை விரிவாக்கத்துக்கு வித்திட்டவர் என்று போற்றப்படும் ரூஸ்வெல்ட்டுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டது எப்படி?

ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்த புகைச்சலுக்கு, சமரசப் பேச்சுவார்த்தையில் தீர்வுகண்டார். அமைதிப் பரிசு வென்றார். நோபல் பரிசு வென்ற முதல் அமெரிக்கரும் அவர்தான்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in