தீபாவளியையொட்டி செட்டிநாடு பலகாரங்கள் தயாரிப்புப் பணி மும்முரம்

தீபாவளியையொட்டி செட்டிநாடு பலகாரங்கள் தயாரிப்புப் பணி மும்முரம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தீபாவளியையொட்டி வெளிநாட்டுக்கு அனுப்ப பலகாரங்கள் தயாரிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது.

காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், மாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன் சுவையால் உலகப்புகழ் பெற்றது.

இங்கு தேன்குழல், கைமுறுக்கு, அதிரசம், மாவு உருண்டை, மணகோலம், மைசூர்பாகு, சீப்பு சீடை, உப்பு சீடை, மகிழம்பூ முறுக்கு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பலகாரங்களுக்கு எண்ணெண்யை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை.

இதனால் நீண்ட நாட்களுக்கு கெட்டாமலும், சுவையும் மாறாமலும் இருக்கும். கடந்த காலங்களில் பாத்திரங்களிலும், பைகளிலும் வழங்கப்பட்ட செட்டிநாட்டு பலகாரங்கள் தற்போது தீபாவளியையொட்டி அழகான பிளாஸ்டிக் நரம்பு கூடை, பிளாஸ்டிக் பாக்ஸ்களில் 'கிப்ட் பேக்கிங்' ஆக வழங்கப்படுகின்றன.

காரைக்குடி முத்துப்பட்டணம் அற்புதம் ஸ்னாக்ஸ் உரிமையாளர் முத்துகருப்பி ஆச்சி கூறியதாவது: சென்னை, கோவை பகுதியை சேர்ந்தவர்கள், பலகாரங்களை 'கிப்ட் பேக்கிங்'ஆக கேட்கின்றனர்.

அதனால் இந்த ஆண்டு 'கிப்ட் பேக்கிங்' முறையில் பலகாரங்களை தயார் செய்து ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்கிறோம்.

என்ன தான் சுவைத்து பார்த்து பலகாரங்களை வாங்கினாலும், அவை தரமானவையா, குழந்தைகளின் உடல் நலனை பாதிக்குமா என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். ஆனால், செட்டிநாட்டு பலகாரங்களில் அத்தகைய கேள்விக்கே இடமில்லை, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in