Published : 21 May 2014 06:37 PM
Last Updated : 21 May 2014 06:37 PM

எலக்‌ஷன் ரன்னர்ஸ் டாட் காம்

தேர்தலில் வெற்றி பெறாத கட்சி களுக்காக ஒரு டெலி ஷாப்பிங் நெட்வொர்க் தொடங்கினால் எந்தெந்த கட்சிக்கு என்ன பொருட்கள் விற்கலாம்.. ஜாலியா ஒரு கற்பனை..

மல்டி பர்ப்பஸ் 'கை'க்குட்டைகள்

காங்கிரஸுக்காகவே இத்தாலியிலி ருந்து தருவிக்கப்பட்ட கைக்குட்டை கள்.. முக்காடு போல தலையில் போட்டுக் கொள்ளலாம், நீரை உறிஞ் சும் அற்புத ஃபார்முலாவில் இது தயாரானது என்பதால் பெருகும் கண்ணீரை ஈரம் தெரியாமல் ஒற்றி எடுக்கலாம், அசடு வழிந்தால் துடைத் துக் கொள்ளலாம், முகத்தில் கட்டிக் கொண்டு தொகுதிகளுக்குள் தைரிய மாக நடமாடலாம்.. இரு புறமும் எலாஸ்டிக் இருப்பதால் நன்கு இழுத்து குடிசைகளுக்குள் கீழே விரித்து அமர்ந்து கொள்ளலாம்.. காவி, வெள்ளை,பச்சை ஆகிய மூவர்ணங்களிலும் கிடைக்கிறது.. இந்த மல்டி பர்ப்பஸ் கைக்குட்டைகளை உடனே பெற 00 00 00 00 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்...

ஆத்மி டிஜிட்டல் ப்ரூம்

அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியின ருக்காக தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் விளக்குமாறுகள்..! 48 நாட்க ளில் பிய்ந்து விடாமல் நீண்ட காலம் உழைக்கும் வகையில் உறுதி யான பைபர் இழைகளால் தயாரிக்கப் பட்டது.. யாராவது நம்மை தாக்கி னால் அதனை தடுக்கும் அதி நவீன ரப்பர் ப்ரூப் உள்ளது. எதை எறிந்தாலும் தடுத்து விடும்.. அடி படாமல் ஜெயிக்க உதவும் இந்த ஹை- டெக் விளக்குமாறுகளை நீங்கள் பெறுவதற்கு யாருக்கும் போன் செய்யவோ டெலிவரி சார்ஜோ தரத் தேவையில்லை.... எல்லா ரயில்களிலும் ஆட்டோ நிலையங் களிலும் வாங்கலாம். அன்னா என்ற பெயர் உள்ளவர்களுக்கு 40% தள்ளுபடி உண்டு..!

சன் பிராண்ட் மேஜிக் பென்

கழகத்தினருக்காகவே கண்டு பிடிக்கப்பட்ட கலக்கல் பேனா.. விதவிதமான கடிதங்கள் எழுதக் கூடிய அற்புதப் பேனா இது. கடிதம், கதை வசனம், வாழ்த்து, அறிக்கை, போன்றவற்றை, நெஞ்சை உருக் கும் அளவிற்கு எழுதுவதற்காக புரொக் ராம் செய்யப்பட்ட பேனா இது. இதில் அதீத மெமரி சிப் பொருத்தப் பட்டுள்ளதால் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. எந்தத் தோல்வி யையும் அனாசயமாக தாங்கும் இந்த ஸ்ட்ராங்கான அற்புதப் பேனாவை நீங் கள் உடனே பெற 00 00 00 00 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுங்கள்...

முரசு கூலிங்கிளாஸ்கள்

கேப்டன் அணிக்காக தயாரான உயர் ரக கூலிங் கிளாஸ்கள் இவை. சிவந்த கண்களை மட்டுமின்றி கண்ணீரையும் மறைக்கும் டெக்னாலஜியில் தயாரிக் கப்பட்டுள்ளது. 14 விதமாக இதனை அணிந்து கொள்ளலாம்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் பிறருக்கு தெரியாது...

இதற்குள் இருக்கும் மினி உள்புற ஸ்கிரீனில் வேட்பாளர் பெயர், தொகுதி பெயர் டிஸ்ப்ளே ஆவதால் எந்த தொகுதியிலும் யாருடைய உதவியும் இன்றி பெயரைச் சொல்லி அசத்தலாம்... கையை வேகமாக ஓங்கினால் இதில் உள்ள சென்சார்கள் விழித்து அலாரம் அடிப்பதால் கீழே உள்ளவர் அடி படாமல் நகர்ந்து கொள்ளலாம்.. அடிப்பது அலாரம் மட்டுமே என்பது அணியினருக்கு ஆறுதல் தரும். ஆண்கள் அணியும் கண்ணாடிக்கு ஒரு பெண் அணியும் கண்ணாடி இலவசம் என்பதால்.. அண்ணியாருக்கும் பயன்படும் இந்த கூலிங்கிளாசை நீங்கள் உடனே பெற 00 00 00 00 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்..!

டைகர் ஹெல்த்தி டானிக்

புரட்சி அண்ணன்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட டானிக் இது. யாழ்ப் பாணக் காடுகளிலிருக்கும் அரிய வகை மூலிகைகளால் தயாரான டானிக்.. இரண்டு ஸ்பூன் குடித்தால் மணிக்கு 10 கிலோமீட்டர்கள் மைலேஜ் கொடுப்பதால் புத்துணர்வோடு நடக் கலாம்.. எந்த சோகத்தையும் ஜீரண மாக்கும் சக்தி வாய்ந்தது.. உணர்ச்சி வசப்படாமல் சாப்பிட வேண்டியது முக் கியம்.. உலக சரித்திரங்கள், கிரேக்க புராணங்கள், கியூபா புரட்சி, ருவாண்டா எழுச்சி போன்ற உலக சரித் திரங்களை இதை குடித்துவிட்டு படித்தால் சுலபமாக மனப்பாடமாகி விடும்...உலகெங்கும் கிடைக்கும் இந்த டானிக் விருதுநகரில் மட்டும் கிடைக்காது... பல முறை மிஸ் ஆனதால் இதனை யாருக்கும் மிஸ்டுகால் கொடுக்காமல் நடந்து வந்தே வாங்கிக் கொள்ளலாம்.! எல்லா பம்பரக் கடைகளிலும் கிடைக்கும்..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x