முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் ரூ.25 லட்சம் உதவி

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் ரூ.25 லட்சம் உதவி
Updated on
1 min read

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கரோனா நிவாரணத்துக்காக ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட பணம் ரூ.25,73,790-யை தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரனிடம் சங்கப் பொதுச் செயலர் ந.ராசகுமார், நிர்வாகிகள் ஜோதிவீரபாண்டியன், சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

அப்போது தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சுமார் 7000 ஆயிரம் பேருக்கு 1.1.2016 முதல் ரூ.250 கோடி ஓய்வூதிய பணப்பலன்கள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இந்தப்பணத்தை உடனடியாக ஓய்வூதியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலாண்மை இயக்குனரிடம் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மேலாண்மை இயக்குனர் தெரிவித்ததாக ராசகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in