Published : 23 Jun 2020 02:23 PM
Last Updated : 23 Jun 2020 02:23 PM

லாக்டவுன் டைரிகள் – 'மிக மிக அவசர' வழக்குகளைக் கையாள அளவீடுகளை உருவாக்குவதற்கான அழுத்தம் தேவை!

உலகெங்கும் பரவியுள்ள, நம் நாட்டில் செங்குத்தான கூர் ஆணி போல் உயர்ந்துகொண்டே போகின்ற கோவிட்-19 எனும் கொடிய நோய்த்தொற்று மக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் சற்றே கவலையளிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது. நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலை பொது / முழு அடைப்புக்கான அறிவுப்பு வந்த நாளான மார்ச் 24 நள்ளிரவிலிருந்து உச்ச நீதிமன்றம் அவசரமாகவும் ஆர்வமாகவும் செயல்படக் காரணமாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் பொது அடைப்புக்கு முன்னர் தானாகவே முன்வந்து சில நடவடிக்கைகளை முன்மொழிந்தது: (1) சிறைச் சாலைகளிலும் கூர் நோக்கு இல்லங்களிலும் அங்கு இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவற்றின் மக்கள் நெருக்கத்தைக் குறைப்பது (2) குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பள்ளிகளும் ‘அங்கன்வாடிகளும்‘ நோய்த்தொற்று காரணமாக மூடியிருக்கும் காலகட்டத்தில் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய மதிய உணவுத் திட்டத்தைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மார்ச் 22 அன்று, மிக அவசர வழக்குகளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு காணொலி வழியாக விசாரிக்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதற்கான நிலையான இயக்க நடைமுறையும் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பொது அடைப்புக்கான அறிவிப்பு வந்தவுடன், மார்ச் 26-ம் தேதி, நீதிமன்றம் ‘மிக அவசரமாக’ விசாரிக்க வேண்டிய வழக்குகள் மீதான விசாரணையை மேற்கொள்வது தொடர்பான தனது முந்தைய சுற்றறிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.

மேற்கண்ட இரண்டு சுற்றறிக்கைகளும் ஏப்ரல் 6-ம் தேதியிட்ட மற்றொரு சுற்றறிக்கையின் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. ஏப்ரல் 6-ம் தேதியிட்ட சுற்றறிக்கை, வழக்குகளை காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கத் தேவையான முழுமையான வழிகாட்டுதல்களைப் பற்றி விளக்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் ஊர்களுக்கு ஓடிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையை ‘தவறான செய்தி‘ களால் தூண்டப்பட்ட ஒரு பெரும் அச்சம் தான் என்று மார்ச் 31 அன்று நீதிமன்றம் ஒதுக்கித் தள்ளியது. இதனால், பொதுநலன் அடிப்படையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியங்களையாவது கொடுக்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஊதியத்தையும் எந்தவிதப் பிடித்தமும் இன்றி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. இந்த மனுக்கள் அரசியல் சாசன சட்டக்கூறு 21-ன் கீழ் நிவாரணங்கள் தரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

நீதிமன்றம் அனைத்து உரிமைகோரல்களையும் நிராகரித்தது மற்றும் சிக்கலில் இருக்கும் குடிமக்களுக்கு உறுதியான தீர்வை வழங்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக உச்ச நீதிமன்றம் உலகத்தின் மிகப் பெரிய பொது அடைப்பின்போது மனிதாபிமானம் சார்ந்த பிரச்சனைகளைக் கையாண்டவிதம் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி பல செய்திக் கட்டுரைகள் வெளியாகின.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் குற்றம்சாட்டுவதுபோல் இந்தக் கட்டுரை, பிரச்சினையான சூழலை நீதிமன்றம் பொருத்தமற்ற முறையில் கையாண்டவிதம் குறித்து அல்ல. தவிர, பொது அடைப்பின்போது காணொலி வாயிலாக மற்றும் இணையம் வாயிலாக நீதிமன்றம் நடக்கப்போவது குறித்த கட்டுரையும் அல்ல. முழு அடைப்புக் காலத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள கோட்பாடுகள்படி மிகவும் அவசரமான வழக்குகள்தானா என்று இந்தக் கட்டுரை அலசுகிறது.

முழு அடைப்புக் காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள்

2020 மே 15-ம் தேதி முடிவடைந்த 3-வது முழு அடைப்புக் காலம் வரை, நீதிமன்றம் 73 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது. 15 வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டன, 55 வழக்குகள் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டன. 3 வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டன. 73 தீர்ப்புகளில், இரண்டு கோவிட் தொடர்பானவை, மற்றவை வெவ்வேறு வகையின் கீழ் வருபவவை.

கோவிட் -19 மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான வழக்குகள் சந்தேகத்துக்கு இடமின்றி மிக அவசரமான வழக்குகள். பிற வழக்குகளில் தேர்வு செய்து ஆய்வு செய்ததில் அவை அவசர வழக்குகள் என்ற வகையில் வருமா என்பது பற்றி நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

(i) Union of India HYPERLINK "https://indiankanoon.org/doc/175416089/"another v. UAE Exchange Centre, என்ற வழக்கில், இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பணம் அனுப்புவதற்கான சேவைகளில் ஈடுபடும் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பான முறையீட்டு மனுவை நீதிமன்றம் விசாரித்தது. ஏப்ரல் 24 வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் வரி பொறுப்புக்கு நிறுவனம் தகுதியற்றதாக இல்லை என்பதால் நீதிமன்றம் அந்த முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. (ii) Commissioner of Customs (Port) v. M/s Steel Authority of India Ltd (SAIL) என்ற வழக்கில், இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் SAIL நிறுவனம் தயாரித்த சில பொருட்களை இறக்குமதி செய்தது பற்றி சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் மதிப்பீடு செய்வது தொடர்பான மேல்முறையீட்டை நீதிமன்றம் ஆராய்ந்தது. ஆலை மற்றும் உபகரணங்களுக்கு மட்டும் இறக்குமதி வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று SAIL நிறுவனம் விரும்பியது.

தவிர சாதனங்களுக்கான விலையில் அவற்றின் உற்பத்திக்கான அனைத்து வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆகியவை அடங்கும் என்றும் SAIL நிறுவனம் கூறியது. ஆலை மற்றும் கட்டுமானம், நிறுவுதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் நடைபெறும் இறக்குமதி நடவடிக்கைகள் தொடர்பான வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை இறக்குமதி பொருட்கள் மதிப்பீட்டில் உள்ளடக்க முடியாது என்று கூறி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினை உறுதிசெய்து இந்த முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. (iii) PILCOM v. CIT, West Bengal என்ற வழக்கில் ஏப்ரல் 29 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. PILCOM என்பது 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் உள்ள கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்கள் / சங்கங்கள் உருவாக்கிய கூட்டு மேலாண்மைக் குழுவாகும். இந்த வழக்கு PILCOM ன் வரிக் கடமையில் இருந்து எழுந்தது. குடியுரிமை பெறாத விளையாட்டு சங்கங்களுக்கு செலுத்தப்பட்ட பணம் அவர்களின் வருமானத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. அதாவது அந்தப் பணம் அவை இந்தியாவில் சம்பாதித்ததாகக் கருதப்படுகின்றன. இதன் விளைவாக, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194 ன் அடிப்படையில், மேல்முறையீட்டாளர் தரவேண்டிய பணத்தில் வரியைக் கழித்துக் கொண்டு மீதியைத் தர வேண்டும் என்று PILCOM கருதியது. இந்த மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

’மிக மிக அவசரம்‘ என்பதற்கான அளவீடுகள்

மேலே குறிப்பிட்ட 3 தீர்ப்புகளும் முழு அடைப்பு காலகட்டத்தில் ‘மிக மிக அவசரம்‘ என்று முடிவு செய்யப்படுவதற்கான வழக்குகளின் தன்மை குறித்து சுட்டிக் காட்டுகின்றன. ஒரு வழக்கு அவசரமானது என்று முடிவு செய்யும் அதிகாரம் நடப்பில் பொறுப்பில் உள்ள நீதிபதியிடம் உள்ளது, வழக்கறிஞர் மற்றும் மனுதாரர் விசாரிப்பதற்கான பட்டியலில் வழக்கு இடம் பெறுவதற்கான அவசரம் குறித்து விளக்க வேண்டும். அவசரமாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இணைய வழியாக வந்த மனுக்கள் எத்தனை என்பது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை.

ஒவ்வொரு வழக்கறிஞர் அல்லது வழக்குறைஞரும் தனது வழக்கு அவசரமாக விசாரிக்கப்படவேண்டும் என்பதை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளார்கள். மேலும் தனக்கான அல்லது தனது கட்சிக்காரருக்கான நிவாரணத்தைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் தன்னைப் பெற்றவர்களைத் தேடி அதில் நீதிமன்ற தலையீட்டைப் பெறுவதற்கான உரிமை சார்ந்த வழக்கு அது சார்ந்தவர்களுக்கு அவசரமான வழக்காகக் கருதப்படும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு ) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் நிவாரணத் தொகை வழங்கப்படவேண்டும் என்றும் கேட்பது அவசரமானது. ஆனால் இந்த வகையான வழக்குகளை அவசரம் என்று நீதிமன்றம் வகைப்படுத்துமா அல்லது ‘அவசரம் இல்லாதவை‘ என்று பட்டியலிடப்பட்டதால் அதற்கான அபராதம் விதிக்கப்படுமா?

இணையவழி நீதிமன்றச் செயல்பாடுகள் பற்றிய ஒரு விமர்சனம் அதன் வெளிப்படைத்தன்மையற்ற நிலை. ‘அவசரம்‘ என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட வேண்டும் என்று வந்த வழக்குகள் பற்றிய அனைத்து வேண்டுகோள்களும் அவ்வாறு வகைப்படுத்தப்படவில்லை என்றும், வெறும் இரண்டு சதவீத வழக்குகளே இணைய வழி நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்படுவதில் வெற்றியடைந்துள்ளன என்றும் இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் இந்திய தலைமை நீதிபதிக்கான 26.05.2020 தேதியிட்ட தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘அவசரம்‘ என்று பட்டியலிடப்படும் வழக்குகள் எவை என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதால் இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் தலைவர், ‘வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான வசதிபடைத்த மேல்வர்க்க வழக்கறிஞர்கள் மட்டுமே இணைய வழி நீதிமன்ற முறையால் பயன்பெற முடியும்‘ என்று குறிப்பிட்டார்.

நீதி அமைப்பு நியாயமாகவும் சமமாகவும் இருக்கவேண்டும் என்றால், அது அணுகுவதற்கு எளிமையானதாகவும் அனைவருக்கும் சமமான வாய்ப்பும் கிடைப்பது அவசியம். ஒரு வழக்கை ‘அவசரம்‘ என்று வகைப்படுத்துவதை அவரவர் விருப்பத்துக்கு விடாமல் அவற்றுக்கான அளவீடுகளை வகுப்பது நீதிமன்றங்களுக்கு மிக அவசியம். வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது வழக்கறிஞர்கள் சமூகத்தினரிடையே கவனிக்கத்தக்க ஒரு தீவிரமான பிரச்சினை. “நீதி என்பது முறையாக வழங்கப்படுவதோடு அது பாரபட்சமில்லாமல் வழங்கப்பட்டது என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும்“ (“justice should not only be done but also seen to be done”) என்று சொல்லப்படுவதை நாம் நம்புவதாக இருந்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.

அரசியல் சாசனத்தின் பகுதி III மற்றும் IV ஐ நிதி சார்ந்த நலன்கள் ஊக்குவிக்குமா? (Can pecuniary interests trump Part III and IV of the Constitution?)

மேலே குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத்தின் முடிவடைந்த 3 வழக்குகளும் நிதி தொடர்பான குறிப்புகள் / ஆதாயங்கள் உடையவை. எனினும், நீதிமன்றம் குறைந்த பட்ச பலத்துடனும் நேரத்துடனும் செயலாற்றிக்கொண்டிருக்கும்போது, அதுவும் இந்த வழக்குகள் நீதிமன்றத்தின் முன் பத்து வருடங்களாக நிலுவையில் இருந்தன என்றபோது இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியிலிட அவை நிதி தொடர்பானவை என்பது மட்டும் போதுமா? இந்த வழக்குகள் நிதி தொடர்பானவை என்பது இவற்றை ‘ மிக மிக அவசரமானவை‘ என்று வகைப்படுத்தவும் அவை தொடர்பாக முடிவுசெய்யலாம் என்றும் நீதிமன்றத்தைத் தூண்டியிருக்கலாம் என்றுதான் நாம் அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட மூன்று தீர்ப்புகள் மற்றும் மூன்றாவது முழு அடைப்பு காலத்தில் முடிவு எடுக்கப்பட்ட வழக்குகளை அவசரமாக ஆய்வு செய்தால் அவற்றில் 50 சதவீதத்துக்கு மேல் வணிக ரீதியாக மற்றும் சிவில் பிரச்சினைகளோடு தொடர்புடையவை என்பது நமக்குத் தெரியவரும்.

செல்வி பழனி, வழக்கறிஞர்

இறுதியாக, தற்போதைய நிலை விரைவில் மாறும். நீதிமன்றங்களின் சாதாரண செயல்பாடுகள் சாத்தியமாகும். ஆனால் ‘மிக அவசர‘ வழக்குகள் என்பதின் உள்ளடக்கம் என்ன என்பது பற்றிய விதிகள் உருவாக்கப்படவேண்டியது அவசியம். இது வழக்கறிஞர்களுக்கு பயன் தரும், வழக்குறைஞர்கள் நீதிமன்றத்தின் கோபத்தை எதிர்கொள்ளாமல் பொருத்தமான முறையில் நீதியை அணுக முடியும். மேலும் செலவுகளுக்கும் இலக்கு வைத்துக் கொள்ளலாம். (perhaps also be targeted with costs) விதிகள் உருவாக்கப்பட்ட பின்னர், அதன் நடத்தைக்கு எதிரான இழிவுபடுத்தும் தாக்குதல்களிலிருந்து நீதிமன்றத்தையும் விடுவிக்கும். ‘மிக மிக அவசரம்‘ என்று பட்டியிலிடப்பட்ட வழக்குகளுக்கான தேவைகள் இன்னமும் நடைமுறையில் இருக்கும்போது நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

சந்தேகத்துக்கிடமின்றி கோவிட்-19 நோய்த்தொற்றின் விளைவாக இதற்கு முன்னெப்போதும் இல்லாதவகையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை, நலிந்த மற்றும் விளிம்புநிலை பிரிவினர் ஏற்றத்தாழ்வான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றின் விளைவுகளைத் தணிக்கவும் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்புவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், திட்டமிடப்படாத முழு அடைப்பினால் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒருபோதும் மீண்டும் செய்யக்கூடாது.

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் “கோவிட்-19 காலகட்டத்தில் பேச்சு சுதந்திரம்’’ என்பதைப் பற்றிய தன் சமீபத்திய உரையில், நீதித்துறை பற்றிய சகிப்பின்மை வளர்ந்து வருகிறது என்றும் நீதித்துறையின் மீது குற்றம் சுமத்துவது அந்த அமைப்பையே சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டார். அநாவசியமான இழிவுபடுத்துதலை முடிவுக்குக் கொண்டுவர ’மிக அவசரம்‘ என்ற வகைப்படுத்தலுக்கு தேவையான அளவீடுகளைக் கட்டமைப்பது அவசரத் தேவை.

- செல்வி பழனி, வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x