Published : 18 Jun 2020 08:56 PM
Last Updated : 18 Jun 2020 08:56 PM

முகக்கவசம் முகத்திற்கா இல்லை நாடிக்கா?- விழிப்புணர்வு இல்லாமல் பணிபுரியும் மதுரை சோதனைச்சாவடி அதிகாரிகள் 

மதுரை

மதுரையில் சோதனைச்சாவடியை வழிநடத்தும் உயர் அதிகாரிகள், காவல்துறையினரே கரோனா ஆபத்தை உணராமல் முகக்கவசத்தை கடமைக்கு பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து வருவோரின் இ-பாஸை பரிசோதனை செய்வதற்காக மதுரை அருகே அமைக்கப்பட்ட மேலூர் பிரான்மலை சென்னை-மதுரை நான்கு வழிச்சாலை இ-பாஸ் சோதனைச் சாவடியில் பணிபுரியும் தாசில்தார், அவருடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களும் முகக்கவசத்தை முகத்திற்கு அணியாமல் நாடிக்கு கீழே இழுத்துவிட்டப்படி விழிப்புணர்வு இல்லாமல் பணிபுரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘கரோனா’வின் வேகம் தற்போது தொற்று பரவலோடு நிற்காமல் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. சென்னையில் ஒரு செவிலியர், திமுக எம்எல்ஏ, போலீஸ் அதிகாரி, முதலமைச்சர் அலுவலக ஊழியர் என்று அரசு ஊழியர்கள், இந்த தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பலர் உயிரிழந்து கொண்டிருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக தினமும் 20-க்கும் மேற்பட்டோர் இறப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் மட்டுமில்லாது பொதுவெளியில் போலீஸார், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நமக்கு என்ன ‘கரோனா’ வரவா போகிறது? என்று அலட்சியமாக முகக்கவசத்தை கடமைக்கு அணிந்து பணிபுரிகின்றனர். அதுவே அவர்களுக்கு ‘கரோனா’ பரவுவதற்கு முக்கியக் காரணமாக உ்ளளது.

மதுரை மாவட்ட எல்லையான மேலூர் பிரான்மலை சென்னை-மதுரை நான்குவழிச் சாலையில் சென்னையில் இருந்து வருவோரின் இ-பாஸை பரிசோதனை செய்வதற்காக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைச்சாவடியில் நேற்று பணிபுரிந்த தாசில்தார், போலீஸ்காரர்கள் சிலர் முகgகவசம் அணிந்து இருந்தாலும், அவர்கள் அதை முகத்திற்கு அணியாமல் நாடிக்கு கீழே இழுத்துவிட்டுள்ளனர். சில சமயங்களில் இவர்கள் முகgகவசத்தை கழற்றி வைத்துவிட்டு பணிபுரிகின்றனர்.

சென்னை மற்றும் அதன் அன்டை மாவட்டங்களில் இருந்து வருவோரின் இ-பாஸை பரிசோதிக்கும் சவாலான பணியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமலே அவர்களை இவர்கள் அணுகுகின்றனர். அவர்கள் கொண்டு வரும் இ-பாஸ் ஆவணங்களை பரிசோதனை செய்து, அதில் சிக்கல் இருந்தால் அவர்களிடம் விசாரிக்கிறார்கள். அப்போது அவர்களுடன் நெருக்கமாக நின்று கூட சில சமயங்களில் பேச வேண்டி இருக்கிறது.

ஆனால், இந்த சோதனைச்சாவடியை வழிநடத்தும் தாசில்தாரே வரப்போகும் ஆபத்தை உணராமல் முகக்கவசத்தை கடமைக்கு பயன்படுத்துகிறார்.

அதனால், அவர் முகக்கவசம் போட்டு என்ன பயன். முகவசம் பயன்படுத்துவதின் அவசியம், நோக்கமும் அவருக்கு தெரியவில்லையா? அல்லது இந்த நோயின் வீரியம் அவருக்கு புரியவில்லையா? என்று பார்ப்போரை ஆதங்கமடைய வைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x