Published : 12 Sep 2015 10:17 AM
Last Updated : 12 Sep 2015 10:17 AM

2013-14-ல் கல்விக் கடன் பெற்றவர்கள் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் முதலிடம்; கடைசி இடத்தில் நீலகிரி

கடந்த 2013-14 கல்வி ஆண்டில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிகமான மாணவர்களும் நீலகிரியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களும் கல்விக் கடன் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு வட்டி மானியத்துடன் கல்விக் கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. இதன்படி கடந்த 2013-14 கல்வி ஆண்டில் தமிழகத்தில் 3,60,127 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 2,32,642 பேர், மாணவிகள் 1,27,485 பேர். இவர் களுக்கு மொத்தம் ரூ.6,753.43 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட் டுள்ளது. இந்தக் கடன்களுக்காக ரூ.436.62 கோடி வட்டி மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

2013-14-ல் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 35,123 பேர் கல்விக் கடன் பெற்றுள் ளனர். சென்னையில் 27,267 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 19,238 பேரும், நெல்லை மாவட்டத்தில் 16,754 பேரும், மதுரை மாவட்டத்தில் 16,155 பேரும் கல்விக் கடன் பெற்றுள்ளனர்.

இதே காலகட்டத்தில் மிகக் குறைந்த அளவாக நீலகிரி மாவட் டத்தில் 3,143 பேர் ரூ.65 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனர். கல்விக் கடன் திட்டத்தில் முன்னோடி வங்கியான கனரா வங்கி கல்விக் கடன் மானியத் திட்டத்துக்கான தனது அதிகாரப்பூர்வ போர்ட்ட லில் இந்தத் தகவல்களை வெளி யிட்டுள்ளது.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ் குமார், “2013-14-ல் இந்தியா முழுவதும் 28.56 கோடி பேர் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதில் 2.56 கோடி பேர் மட்டுமே கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதிலும் 9.20 லட்சம் பேர் மட்டுமே வட்டி மானிய திட்டத்தில் கடன் பெற்றுள்ளனர்.

அரசின் வட்டி மானிய கல்வித் திட்டத்தின்படி கல்விக் கடன் வழங் குவதிலும் கடனை வசூலிப்பதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகளை வங்கிகள் விதித்து வருவதால்தான் கடன் பெறும் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது.

மானியத்துடன் கூடிய கல்விக் கடன் குறித்து மாணவர்கள் தகவல்களைக் கேட்டு பெறுவதற்கு அனைத்து வங்கிகளும் கட்டண மில்லா தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித் திருந்தும் பெரும்பாலான வங்கிகள் அதைப் பின்பற்றவில்லை. பொதுத் துறை வங்கிகளில் 12 வங்கிகள் இந்தத் திட்டம் குறித்து தங்களது இணையதளத்தில் எந்தத் தகவலை யும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x