

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வில்லன் நடிகர் ரம்மி செளந்தர் உணவுப் பொருள் வழங்கி உதவினார்.
மதுரை அவனியாபுரத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் வசிக்கின்றனர். இவர்கள் பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள். இவர்கள் கைவினைப் பொருட்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் தயாரித்து மதுரை மாநகர் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியே எடுத்துச் சென்று விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து கேள்விப்பட்ட ஜிகர்தண்டா, ரம்மி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ரம்மி செளந்தர் அவர்களுக்கு 10 நாட்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.
மேலும் உதவிகளை செய்வதாக அந்த மாற்றுத்திறனாளிகளிடம் ரம்மி செளந்தர் உறுதி தெரிவித்தார்.