Published : 27 May 2020 11:02 AM
Last Updated : 27 May 2020 11:02 AM

சென்னை பள்ளி மாணவிகள் உருவாக்கிய கரோனா கேள்வி - பதில்!

1. கரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது?

உலக சுகாதார நிறுவனமும், முதற்கட்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கரோனா வைரஸ் சீனாவில், வூஹானிலுள்ள இறைச்சி சந்தையில் இருந்து தோன்றி, பரவியதாகக் கூறி வந்தாலும். சமீபத்திய ஆய்வுகள் அதை மறுப்பதாக உள்ளன.

Alina chan (molecular biologist) shing zhan (Evolutionary biologist) செய்த ஆய்வில் இந்த வைரஸ் வூஹான் சந்தையில் இரு வேறு உயிரினங்கள் மத்தியில் பரவவில்லை எனத் தெரியவந்தது. வைரஸ் தோற்றம் இறைச்சி சந்தை இல்லை என தெளிவுபடுத்துகிறது. சீன வைரஸ் எங்கிருந்து தோன்றி, பரவியது என சோதனை நடத்தினாலும் அதன் முழு முடிவுகளை இன்னமும் வெளியிட வில்லை?! அப்படியானால் அந்த வைரஸ் எங்கிருந்து வந்தது?

அமெரிக்க நோய்த்தடுப்பு மையத்தின் (CDC) இயக்குனர் Dr Robert Red Field, house over seeing committee ன் "2019 ல் அமெரிக்காவில் Flu காய்ச்சலால் இறந்தனர் என அறிவிக்கப்பட்ட சிலர் கரோனா வைரஸால் இறந்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது உண்மை தானா? "என்ற கேள்விக்கு, " சிலர் இறந்தது உண்மைதான் என பதிலளித்தது. ஏன் அமெரிக்காவிலுள்ள ( Fort Detrick ) ராணுவ மருத்துவ மையத்தில் அது செயற்கையாக? உருவாக்கப்பட்டிருக்கக்கூடாது'' எனும் கேள்வியை எழுப்புகிறது.

AIDS வைரஸைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற லெக் மாண்டெய்க்னர், கரோனா வைரஸில் AIDS வைரஸ் மலேரியா கிருமியின் சிறு பகுதிகள் இருப்பது அது இயற்கையாக நிகழ வாய்ப்பில்லை என்றும் Wuhan Institute Of virology யிலிருந்து பரிசோதனையின் போது தப்பி வெளியே வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்

காலம் தான் நமக்கு உண்மையைத் தெளிவுபடுத்தும். (SARS COV - 2 வைரஸ் இயற்கையாக நிகழ 800 வருடங்கள் தேவைப்படும் என்ற கருத்தும் உள்ளது.

2. கரோனா வைரஸ் ஏன் சிறார்களிடம் பாதிப்புகளை குறைவாகவும் வயதானவர்களிடம் ( குறிப்பாக சர்க்கரை, இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ) பாதிப்புகளை அதிகமாகவும் ஏற்படுத்துகிறது?

கரோனா வைரஸ் மனித செல்களில் தன்னை இணைத்துக்கொள்ள ACE-2 Receptor ஐ பயன்படுத்துகிறது

(A) சிறார்களுக்கு ACE-2 Receptor குறைவாகவும் வயதானவர்களிடத்து அது அதிகமாகவும் உள்ளது நியூயார்க் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே சிறார்களுக்கு பாதிப்பு குறைவாகவும் வயதானவர்களுக்கு பாதிப்பு அதிகமாகவும் இருப்பதற்குக் காரணமாக உள்ளது.

(B) வைரஸை உடம்பிலிருக்கும் Micro RNA சண்டையிட்டு அழிக்கிறது Micro RNA வின் அளவு வயதானவர்களுக்கு,சர்க்கரை, இருதய நோய் உள்ளவர்களுக்கு குறைந்து காணப்படுவதாக Carlos M Isales எனும் Augusta University USA ஆய்வாளர் "Aging and Disease" எனும் அறிவியல் பத்திரிக்கையில் தெளிவாக கண்டுபிடித்து எழுதியுள்ளார். இதன் காரணமாகவே வயதானவர்களுக்கு ( குறிப்பாக. சர்க்கரை, இருதய நோய் உள்ளவர்கள்) கூடுதல் பாதிப்பு ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. ACE-2 Receptor - Angiotensin Converting Enzyme-2.

3. கரோனா வைரஸ் காற்றில் பரவுமா?

Science Direct( June 2020) பத்திரிகையில் வந்துள்ள செய்தி அனைவரது கவனத்தையும் (குறிப்பாக அரசுகள்) ஈர்க்க வேண்டும். காற்றில் பரவும் உண்மையை ஏற்றுக்கொண்டு ( குறிப்பாக உள்வெளிகள் Indoors) உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் 50-50000 Droplets வெளிவருகிறது- Erin Bromage-Immunologist. குறிப்பாக காற்றோட்டம் குறைவாக உள்ள அறைகளில் ( உ.ம்) வூஹான் மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகள்- வைரஸ்- காற்றில் அதிக நேரம் இருந்து அதன் மூலம் நோய் பரவுதல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசு இதனை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இருக்குமிடங்களில் நல்ல காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

Physics Of Fluids பத்திரிகையில் சைப்ரஸ் நாட்டின் Nicosia University செய்த ஆய்வில் ஒருவர் லேசாக இருமும்போது எச்சில் மூலம் 4 Kmph (kilometre per hour) காற்று வீசுகையில் 5 நொடியில் வைரஸ் 18 அடிவரை பரவுவது உறுதியாகியுள்ளது. ஆக சமூக இடைவெளி என வரும்போது 6 அடி இடைவெளி போதுமா எனும் கேள்வி எழுகிறது (மார்ச் 29ல் WHO இது காற்றில் பரவும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது).

4. திறந்த வெளிகளில், சாலைகளில் கிருமிநாசினியைப் பயன்படுத்துவது கரோனா வைரஸைக் கொல்லுமா?

தமிழகத்தில், இந்தியாவில் கரோனா வைரஸைக் கொல்ல பல இடங்களில் கிருமிநாசினி பொடி பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் உலக சுகாதார நிறுவனம் "அது பயனற்றது" மட்டுமல்லாமல் " தீங்கு விளைவிக்ககூடியது" என அறிவுரை வழங்கியுள்ளது

"Spraying Or Fumigation Of out door Places Such as Streets or market Places is not recommended to kill covid -19 virus " - WHO. ஏனெனில் அங்குள்ள தூசும், அழுக்கும் கிருமிநாசினிகளைப் பயனற்றதாக ஆக்கிவிடும். மேலும் குளோரின் மற்றும் மற்ற கிருமிநாசினிகளைத் தெளிப்பதால் தோல், கண்களில் எரிச்சல் ஏற்படுவதோடு மூச்சுத்திணறல், செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம் - WHO

வேண்டுமானால் நீரில் கரைத்த கிருமிநாசினிகளைத் துணி கொண்டு துடைத்து எடுக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளை நாமும் பின்பற்றி தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.

5. கரோனா தடுப்பு- பரிசோதனைகள் - தமிழக அரசு போதுமான அளவு செய்கின்றதா?

தமிழக அரசு புள்ளி விவரப்படியே 10ல் 8-9 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமலே கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் பரிசோதனை மூலம் மட்டுமே நோயை உறுதிப்படுத்தி, பாதித்தவர்களைத் தனிமைப்படுத்தி, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே நிபுணர்களின் கருத்து

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக சராசரியாக 12536 பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் கடந்த 10 நாட்களாக (மே 8-17) இந்தியாவில் புதிதாக ஏற்பட்ட தொற்றில் தமிழகத்தின் பங்கு 13.7% என அதிகமாக உள்ளதால், அதற்கேற்றவாறு பரிசோதனைகளின் எண்ணிக்கை இருப்பது அவசியம்.

பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு உறுதியான தொற்றுக்கு (Tests per confirmed case) எவ்வளவு பரிசோதனைகள் செய்தால் நோயைத் திறமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தமிழக பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது நோய்த்தடுப்பை உறுதிப்படுத்தும். Dr.செளம்யா சுவாமிநாதன் (Chief scientist -WHO) கூறுவது போல், "தொற்று ஏற்பட்ட ஒரு நபரின் நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவரையும் அல்லது குறைந்தபட்சம் 80% நபர்களைப் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதே சிறந்த வழி" என்பதைக் கருத்தில் கொண்டு உரிய தேவையான பரிசோதனைகளை அரசு செய்ய முன்வருவது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதுடன் நோய்த்தொற்றை உறுதிப்படுத்தும்.

- பிரணவி & பிராப்தி (வயது 12)
சர்ச்பார்க் பள்ளி, சென்னை
உதவி - மருத்துவர் வீ புகழேந்தி).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x