

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குருதி கொடையாளர் வாட்ஸ்ஆப் குழுவினர் ஊரடங்கு நாட்களில் 130 பேருக்கு ரத்ததானம் செய்து உயிர் காத்துள்ளனர்.
காரைக்குடி குருதி கொடையாளர்கள் வாட்ஸ்ஆப் குழு 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தக் குழுவில் 19 முதல் 65 வயதுள்ள 400-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவினர் 30 மாதங்களில் 300-க்கும் மேற்பட்டேருக்கு ரத்ததானம் செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்நிலையில் காரைக்குடி குருதிக் கொடையாளர்கள் வாட்ஸ்ஆப் குழுவினர் 60 நாட்களில் 130 பேருக்கு ரத்தானம் செய்து உயிரை காத்துள்ளனர். அக்குழுவினர் சேவையை பாராட்டி காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி அருள்தாஸ் ஊக்கச் சான்றிதழ்களை வழங்கினார்.
அறக்கட்டளை ஆலோசகர் முத்துக்குமார், நிறுவனர் பிரகாஷ் மணிமாறன், துணைத் தலைவர் ராமு, செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சக்திசுமன், துணைச் செயலாளர்கள் கோட்டீஸ்வரன், முத்துக்குமார் பங்கேற்றனர்.
ரத்த வங்கி மருத்துவ அதிகாரி அருள்தாஸ் கூறியதாவது: ஊரடங்கு காலக்கட்டத்திலும் ரத்தம் தேவைப்படுவோருக்கு தாமதமின்றி வாட்ஸ்ஆப் குழுவினர் ரத்த தானம் செய்துள்ளனர்.
அவர்களது சேவையை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினோம், என்று கூறினார்.