Published : 09 May 2020 01:19 PM
Last Updated : 09 May 2020 01:19 PM

தூய்மைப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய மதுரை காவல்துறையினர்

கரோனா தடுப்புக்கான ஊரடங்கையொட்டி கிராமப்புறங்களில் உணவுப் பொருட்களுக்கு சிரம்மப்படும் மக்களைக் கண்டறிந்து, உதவிடவேண்டும் என மதுரை சரக டிஐஜி ஆனிவிஜயா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி, மாவட்டத்தில் சக்கிமங்கலம், சிலைமான், பனையூர் உட்பட பல்வேறு இடங்களில் ஏழை மக்கள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள், நிவாரணம் வழங்கப்படுகிறது.

இதன்படி மதுரை மாவட்டம் எழுமலையில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொட்டல்பட்டி கிராமத்தில் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கணவனை இழந்தவர்கள் என, 165 நபர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் உசிலம்பட்டி துணை கண்காணிப்பாளர் ராஜா, காமராசர் பல்லைக்கழக உதவி பேராசிரியர் முனியாண்டி ஆகியோர் உணவுப்பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், எழுமலை காவல் ஆய்வாளர் தினகரன், சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ண பாண்டியன், உத்தபுரம் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x