Last Updated : 08 May, 2020 02:59 PM

 

Published : 08 May 2020 02:59 PM
Last Updated : 08 May 2020 02:59 PM

ஒரே வருடத்தில் 6 ஹிட் கொடுத்த சிவாஜி 

ஒரே வருடத்தில் சிவாஜி நடித்து ஏழு படங்கள் வெளிவந்தன. இதில், ஆறு படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.அதே வருடத்தில், எம்ஜிஆர் ஆறு படங்களில் நடித்தார். ஜெய்சங்கர் பத்து படங்களில் நடித்திருந்தார்.


1972ம் ஆண்டு, எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கரின் படங்கள் நிறையவே வந்தன. ‘அன்னமிட்ட கை’, ‘இதயவீணை’, ‘சங்கே முழங்கு’, ‘நல்லநேரம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘நான் ஏன் பிறந்தேன்’ என ஆறு படங்களில் நடித்தார்.


இதில், ‘அன்னமிட்ட கை’ படத்தை எம்.கிருஷ்ணன் இயக்கினார். ‘இதயவீணை’ படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினார்கள். ’சங்கே முழங்கு’ படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். ‘நல்லநேரம்’ படத்தை எம்.ஏ.திருமுகமும் ‘ராமன் தேடிய சீதை’ படத்தை ப.நீலகண்டனும் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தை எம்.கிருஷ்ணனும் இயக்கினார்கள்.
இதேபோல், சிவாஜிகணேசன் ‘ஞான ஒளி’, ‘தர்மம் எங்கே?’, ‘தவப்புதல்வன்’, ‘நீதி’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘ராஜா’, ‘வசந்தமாளிகை’ என ஏழு படங்களில் நடித்தார். ‘ஞான ஒளி’ படத்தை பி.மாதவன் இயக்கினார். ‘தர்மம் எங்கே?’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். ‘தவப்புதல்வன்’ படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார். ‘நீதி’ படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தை பி.மாதவனும் ‘ராஜா’ படத்தை சி.வி.ராஜேந்திரனும் ‘வசந்த மாளிகை’ படத்தை கே.எஸ்.பிரகாஷ்ராவும் இயக்கினார்கள்.


‘அன்னமிட்ட கை’ படத்தில் ஜெயலலிதா எம்ஜிஆருடன் நடித்தார். ‘இதயவீணை’யில் மஞ்சுளாவும் லட்சுமியும் நடித்தார்கள். ‘சங்கே முழங்கு’வில் லட்சுமி நடித்தார். ‘நல்லநேரம்’ படத்தில் கே.ஆர்.விஜயாவும் ‘ராமன் தேடிய சீதை’யில் ஜெயலலிதாவும் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் கே.ஆர்.விஜயா, காஞ்சனா இருவரும் நடித்தார்கள்.
‘ஞான ஒளி’யில் சாரதா, ‘தர்மம் எங்கே?’ வில் ஜெயலலிதா, ‘தவப்புதல்வன்’ படத்தில் கே.ஆர்.விஜயா, ‘நீதி’ படத்தில் ஜெயலலிதா, செளகார் ஜானகி, ‘பட்டிக்காடா பட்டணமா’வில் ஜெயலலிதா, ‘ராஜா’வில் ஜெயலலிதா, ‘வசந்த மாளிகை’யில் வாணிஸ்ரீ முதலானோர் நடித்தார்கள்.


72ம் ஆண்டு, எம்ஜிஆருடன் ஜெயலலிதா இரண்டு படங்களில் நடித்தார். இதே வருடத்தில், சிவாஜியுடன் நான்கு படங்களில் நடித்தார் ஜெயலலிதா.
அந்த வருடத்தில், எம்ஜிஆருக்கு அனைத்துமே நூறுநாள் படங்களாக அமைந்தன. ஆனாலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘இதயவீணை’ இரண்டு படங்களும் அமைந்தன.


சிவாஜிக்கு இந்த வருடம், ‘தர்மம் எங்கே’ படம் தோல்விப்படமாக அமைந்தது. மற்றபடி, ‘ஞான ஒளி’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ ஆகிய மூன்று படங்களும் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றன. ‘தவப்புதல்வன்’, ‘நீதி’, ‘ராஜா’ ஆகிய படங்கள் நூறுநாள் படங்களாக, வெற்றிப் படங்களாக அமைந்தன. இதில் கொலை செய்துவிட்டு தப்பிவிடும் ஆண்டனியாக ‘ஞான ஒளி’யிலும் மாலைக்கண் நோய் கொண்டவராக ‘தவப்புதல்வன்’ படத்திலும் கொள்ளைக்கூட்டத்தைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனாக ‘ராஜா’விலும் பண்பாடு மிக்க கிராமத்தானாக ‘பட்டிக்காடா பட்டணமா’விலும் ‘நீதி’யில் ஒரு குடும்பத்தைக் காக்கும் பொறுப்புடன் செயல்படும் டிரைவராகவும் மிகப்பெரிய ஜமீன் சாதாரணப் பெண்ணுடன் காதல்வயப்பட்டு வலியில் துடிப்பவராகவும் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் சிவாஜி.


எம்ஜிஆர் படங்களிலும் சரி, சிவாஜி படங்களிலும் சரி... எல்லாப் படங்களின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தன.


இதே 72ம் ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து பத்துப் படங்கள் வெளியாகின. ‘அவசர கல்யாணம்’, ‘கங்கா’, ‘உனக்கும் எனக்கும்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘காதலிக்க வாங்க’, ‘சவாலுக்கு சவால்’, ‘நவாப் நாற்காலி’, ‘மாப்பிள்ளை அழைப்பு’, ‘வரவேற்பு’, ‘ஜக்கம்மா’ என பத்துப் படங்கள் வெளியாகின. ஒருபக்கம் ஆக்‌ஷன், இன்னொரு பக்கம் காமெடி என ஜெய்சங்கருக்கு படங்கள் அமைந்தன. இதில் ஓரிரண்டு படங்கள் தவிர, எல்லாப் படங்களுமே லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x