ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று உதவிய ஊராட்சித் தலைவர்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று உதவிய ஊராட்சித் தலைவர்

Published on

சமூக விலகலை வலியுறுத்தி ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று அரிசி வழங்கினார் திருமோகூர் ஊராட்சித் தலைவர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதனால் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். பல இடங்களில் மக்களை ஒரே இடத்தில் கூட வைத்து உதவிகள் வழங்குவதால் சமூக விலகல் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமோகூர் ஊராட்சி தலைவர் ஏ.பி.ஆர்.அண்ணாமலை தன் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று அரிசி வழங்கி முன்னுதாரணம் ஏற்படுத்தியுள்ளார்.

அவர் இன்று காலை ஊராட்சி முதல் வார்டில் தொடங்கி அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்று ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கினார். ஊராட்சி உறுப்பினர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in