Published : 24 Apr 2020 16:44 pm

Updated : 24 Apr 2020 16:45 pm

 

Published : 24 Apr 2020 04:44 PM
Last Updated : 24 Apr 2020 04:45 PM

பூம் பூம் மாடுகளுக்கு தீவனம் வழங்கிய மதுரை பாஜகவினர்

corona-curfew-bjp-helps-grassroots-people

மதுரை

மதுரையில் தீவனம் இல்லாமல் தவித்த பூம் பூம் மாடுகளுக்கு பாஜகவினர் தீவனம் வழங்கினர்.

மதுரை சக்கிமங்கலத்தில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் அதிகளவி்ல் வசிக்கின்றனர். இவர்கள் பூம் பூம் மாடுகளை ஒவ்வொரு ஊர்களுக்கும் அழைத்துச் சென்று நாதஸ்வரம் இசைக்கு மாடுகளை ஆடவிட்டு சம்பாதித்து வருகின்றனர்.


ஊடரங்கு காரணமாக ஊர் ஊராக பூம் பூம் மாடுகளை அழைத்து செல்வதில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வைத்திருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளுக்கு தீவனம் கூட கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரை புறநகர் பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் பாஜகவினர் 80 பூம் பூம் மாடுகளுக்கு தேவையான தீவனத்தை சக்கிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் இன்று வழங்கினர்.

கரோனா தாக்கத்தின் காரணமாக ஆதரவற்றவர்கள், முதியவர்கள் யா௫ம் வெளியே செல்ல முடியாத இந்த நேரத்தில் உணவுக்காக அவர்கள் துன்பப்படக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலி௫ந்து பாஜக சார்பில் மோடி கிச்சனை உ௫வாக்கி ஆதரவற்றோருக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பாஜக சார் பில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவுப் பொருட்களும், 32 லட்சம் உணவுப் பொட்டலங்களும் வழங்கப் பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மதுரையில் தீவனம் இல்லாமல் தவித்த பூம் பூம் மாடுகளுக்கு பாஜகவினர் தீவனம் வழங்கியுள்ளனர்.

தவறவிடாதீர்!பூம்பூம் மாடுகள்மதுரை பாஜகவினர்தீவனம்மாட்டுத்தீவனம்கரோனா ஊரடங்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x