

கரோனா தொற்று பரவாமல் தடுக்க தனித்திருப்பவர்களுக்கு செல்போன் வழியாக கவுன்சலிங் வழங்கப்படும் என மதுரை நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் மேலாண்மை அறங்காவலர் எஸ்.செல்வகோமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஊரடங்கால் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தொலைபேசி வழியாக மதுரை பாத்திமா கல்லூரியின் சமூகவியல், சமூகப்பணித்துறை மற்றும் மற்றும் ஆக்சன் எய்ட் அமைப்புடன் சேர்ந்து கவுன்சலிங்/ ஆற்றுப்படுத்தல் வழங்க நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேசன் முடிவு செய்துள்ளது.
மதுரை பாத்திமா கல்லூரியின் சமூகவியல் மற்றும் சமூகப்பணித்துறையின் தலைவர் டாக்டர் மீனாகுமாரி, மற்றும் ஏராளமான சமூக உளவியலாளர்கள் செல்போன் மூலம் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் வழங்க முன்வந்துள்ளனர்.
கவுன்சலிங் தேவைப்படுவோர்கள் 9843460061, 9894611838, 9524318207 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.